மருத்துவமனையில் ஆண் குழந்தை திடீர் மாயம்: சென்னையில் பரபரப்பு
சென்னை:
சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் "இன்குபேட்டர்" கருவியில்வைக்கப்பட்டிருந்த பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை திருடு போய் விட்டது. இதனால் அங்குபெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எழும்பூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் டிகுரூஸ் என்பவரின் மனைவியான ஜெசிந்தாமேரிக்கு கடந்த 12ம் தேதி இரவு ஆண் குழந்தை பிறந்தது. இது அவர்களுக்கு இரண்டாவதுகுழந்தை.
ஆபரேஷன் மூலம் பிறந்து இந்தக் குழந்தைக்கு இதயம் மிகவும் பலவீனமான நிலையில்இருந்ததாலும், மூச்சுத் திணறல் இருந்ததாலும் "இன்குபேட்டர்" கருவியில் குழந்தை வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை அந்தக் குழந்தை திடீரென்று காணாமல் போய்விட்டது. டாக்டர்களும்நர்சுகளும் மட்டுமே வந்து செல்லக் கூடிய இந்த முக்கியமான வார்டுக்குள் வைக்கப்பட்டிருந்தகுழந்தையைக் காணவில்லை என்ற தகவல் மருத்துவமனையில் பரவியதும் அங்கு பெரும் பரபரப்புஏற்பட்டது.
மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ரவீந்திர நாத் உடனடியாக அங்கு விரைந்தார். போலீஸாரும்வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. சம்பவம் நடந்தபோது வார்டில் பணியில் இருந்த மூன்றுஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பணியில் இருந்த டாக்டர்கள், மூன்று நர்சுகளுக்குவிளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
பிறந்து நான்கு நாட்களே ஆன நிலையில் முகத்தைக் கூட சரியாகப் பார்க்காத நிலையில்குழந்தையைப் பறிகொடுத்துள்ள பெற்றோர்கள் டிகுரூஸும், ஜெசிந்தா மேரியும் மிகவும்அதிர்ச்சியடைந்த நிலையில் உள்ளனர். இது அவர்களுக்கு 10 ஆண்டுகள் கழித்துப் பிறந்த குழந்தைஎன்பது குறிப்பிடத்தக்கது.


