2 பிரிட்டன் அமைச்சர்கள், எம்.பி ராஜினாமா
லண்டன்:
ஈராக் மீது அமெரிக்க- பிரிட்டன் படைகள் நியாயமில்லாமல் தாக்குதல் நடத்துவதாகக் கூறி இரு இங்கிலாந்து அமைச்சர்களும் ஒரு மூத்தஎம்.பியும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
இந்தப் போருக்கு பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் ஆதரவு தந்து வருவதை எதிர்த்து நலத்துறை துணை அமைச்சர் லார்ட் பிலிப் ஹன்ட்,உள்துறை அமைச்சர் ஜான் டென்ஹாம் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
அதே போல பிரிட்டன் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் முக்கிய ஆளும் கட்சி எம்.பியுமான ராபின் குக் தனது பதவியைராஜினாமா செய்துள்ளார்.
ஈராக்கிடம் எந்த விதமான பேரழிவு ஆயுதமும் இல்லை. அநியாயமாக ஒரு போர் நடக்கிறது. அதை பிரிட்டன் ஆதரிப்பது மிகப் பெரியத்தவறு என்று குக் கூறியுள்ளார்.
பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேலுக்கு ஐ.நா. உத்தரவிட்டு 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இஸ்ரேல் ஐ.நா.வைமதிக்கவல்லை. அந்த நாட்டின் மீது அமெரிக்கா ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ராபின் குக் கேள்வி எழுப்பியுள்ளார்.


