புலிகள்- இலங்கை 6 வது சுற்று பேச்சு தொடங்கியது
ஹகோன்:
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான 6வது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று ஜப்பானின்ஹகோன் நகரில் தொடங்கியது.
பேச்சுவார்த்தை தொடங்கியதுமே விடுதலைப் புலிகளின் படகை இலங்கை கடற்படை மூழ்கடித்ததற்கு புலிகள்தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதனால் பேச்சுவார்த்தைகள் சூடாகவே தொடங்கின.
புஜி மலைப் பகுதியில் பனி மூடிய சிறிய நகரமான ஹகோனின் ஜப்பானிய பாரம்பரிய உணவுடன் பேச்சுதொடங்கியது. ஆனால், புலிகள் தரப்பில் காட்டப்பட்ட கோபம் அந்த பனி சூழ்ந்த அறையிலும் சூடானசூழ்நிலையை உருவாக்கியது.
இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் என இலங்கை அமைச்சரும் அரசுத் தரப்புக்குழுவின் தலைவருமான காமினி பெரிஸ் தெரிவித்தார்.
அந்தத் தாக்குதலில் 11 புலிகள் உயிர் நீத்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தப் பேச்சுவார்த்தை நடக்குமாஎன்பதே சந்தேகமாக இருந்தது. பேச்சுவார்த்தையைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறிய புலிகள் இறுதியில்நார்வே தலையீட்டினால் இதில் பங்கேற்க முன் வந்தனர்.
அதிகாரப் பகிர்வு, தமிழர் பகுதிகளை மறுசீரமைப்பது, மனித உரிமைகள், வரி வருவாயை எப்படிப் பகிர்ந்துகொள்வது ஆகியவை குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கியமாக ஆலோசிக்கப்பட உள்ளன.
புலிகள் தரப்பில் ஆண்டன் பாலசிங்கம் தலைமையிலான குழு இந்தப் பேச்சில் பங்கேற்றுள்ளது.


