தமிழகத்தில் இந்தியை திணிக்க ஜெ. முயற்சி: ராமதாஸ் புகார்
சென்னை:
தமிழகத்தில் இந்தியைத் திணிப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா முயற்சிப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்தில் நாகர்கோவில் அரசு விழாவின்போது ஜெயலலிதா பேசுகையில், மத்திய அரசு தமிழை ஆட்சிமொழியாக்கினால் தமிழக பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்வதாகக் கூறினார்.
இதற்கு ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இன்று அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழக பள்ளிகளில் இந்திய கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்று ஜெயலலிதா கூறியுள்ளது கடும்கண்டனத்திற்குரியது.
இது என்ன பண்டமாற்று வியாபாரமா? இதையெல்லாம் நாங்கள் அனுமதிக்க முடியாது. இதன் மூலம் ஜெயலலிதாதமிழகத்தில் இந்தியைத் திணிக்க முயற்சித்து வருகிறார்.
இதற்கு யாரும் இடம் கொடுத்து விடக் கூடாது. இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று ஆசை காட்டினாலும்யாரும் ஏமாந்து போய்விடக் கூடாது.
மீறி இந்தியைத் திணிக்க முயன்றால் அதை எதிர்த்து பாமக தீவிரமாகப் போராடும். தமிழக மக்களின்உணர்வுகளைக் கிளறிப் பார்க்க வேண்டாம் என்று ஜெயலலிதாவைக் கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த 2001ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஜெயலலிதா அரசு மக்களின் கையில் இருந்தும், பையில் இருந்தும்பணத்தைச் சுரண்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1,000 பேருக்குக் கூட வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவில்லை. பதிலாக, 75,000 பேரை வீட்டுக்கு அனுப்பியுள்ளது இந்த அரசு.
தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.2,000 கோடி மின்சாரம் திருடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதைத் தடுத்தாலேவிவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்கான செலவை சரிக்கட்டி விடலாம்.
இந்த லட்சணத்தில் தற்போது ரூ.1,400 கோடிக்கு மின்சாரக் கட்டணத்தையும் ஜெயலலிதா உயர்த்தியுள்ளார். மின்கட்டணத்தை உயர்த்திவிட்டு மானியம் என்ற கண்துடைப்பு வேலையை மக்கள் இனியும் நம்ப மாட்டார்கள்.
ஆறு கோடி ஜனத் தொகை கொண்ட தமிழகத்தில் ரூ.6,000 கோடிக்கு மக்கள் தலையில் சுமையை ஏற்றியுள்ளதுஅதிமுக அரசு. மக்களைக் கசக்கிப் பிழிந்து யாருக்காக நிதி ஆதாரத்தைப் பெருக்குகிறார்கள்? அவர்கள் நடத்தும்ஆடம்பர விழாக்களைப் பார்த்தாலே தெரிகிறதே.
தேசிய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்த முடியாது என்று அண்ணாபல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 50 சதவீத இடங்களை சுயநிதி பொறியியல் கல்லூரிகளே நிரப்பிக்கொள்ளலாம் என்றும் அது அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 90 சதவீத பொறியியல் கல்லூரிகள் தனியாரிடம்தான் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகம் இந்தசுயநிதிக் கல்லூரிகளின் பிரதிநிதிகளாகவே மாறி விட்டதைப் போல் தெரிகிறது. இதை எதிர்த்து பாமக போராட்டம்நடத்தும் என்றார் ராமதாஸ்.


