For Daily Alerts
Just In
அக்னி ராஜுவின் ஜாமீன் மனு தள்ளுபடி
மதுரை:
நில மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள திமுக ராஜ்யசபா எம்.பி. அக்னி ராஜுவின் ஜாமீன் மனுதள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
மதுரை திருநகர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் தலைவராக இருந்தபோது ரூ.1.47 கோடி அளவுக்கு மோசடிசெய்ததாக அக்னிராஜு உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தற்போது உடல் நலக் குறைவு காரணமாக அக்னி ராஜு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்நிலையில் அக்னி ராஜு சார்பில் மதுரை 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல்செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த நீதிபதி சுபத்ரா தேவி ஜாமீன் வழங்க மறுத்து அக்னி ராஜுவின் மனுவை நிராகரித்தார்.


