இந்தியா திடீர் தாக்குதல் நடத்துமா?- பாகிஸ்தான் அச்சம்
இஸ்லாமாபாத்:
ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதைப் போல் எங்கள் மீது இந்தியா தாக்கினால் அதன் விளைவுமிகவும் மோசமானதாக இருக்கும் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதி இல்லாமல் ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்துள்ளது.
இதேபோல் எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் இந்தியா எங்களைத் தாக்கினால் அதற்குத் தகுந்த பதிலடிகொடுப்போம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ஷித் மெஹ்முத் கசூரி தெரிவித்தார்.
ஒவ்வொரு பாகிஸ்தானியனும் இந்தியாவை எதிர்த்துத் தாக்குதல் நடத்துவான் என்று ஆவேசமாக அப்போதுகூறினார் குர்ஷித்.
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் ஏதும் இந்தியாவிடம் இல்லை. ஆனால், பாகிஸ்தான் அமைச்சர்அவசரப்பட்டு அவராகவே முன் வந்து இவ்வாறு கூறியிருப்பது இந்தியாவிடம் அந்நாட்டுக்கு உள்ள பயஉணர்வைத்தான் காண்பிக்கிறது.
பெட்ரோல், டீசல் இருப்பு உள்ளது:
இதற்கிடையே வளைகுடாவில் போர் ஏற்பட்டுள்ள போதிலும் இந்தியாவில் இப்போதைக்கு பெட்ரோலியப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவின் முக்கிய பெட்ரோலிய நிறுவனங்கள் அனைத்தும் போதுமான அளவிற்கு பெட்ரோல், டீசலை"ஸ்டாக்" செய்து வைத்துள்ளன.
இரண்டு மாதங்கள் வரை பெட்ரோலியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு வராது என்று பெட்ரோலியத் துறை செயலாளர் சதுர்வேதிதெரிவித்தார். அதேபோல் சமையல் எரிவாயு சப்ளை செய்வதிலும்.


