ஈராக்கில் ஊடுருவினால்... அமெரிக்கப் படைகளுக்கு சதாம் ஹூசேன் எச்சரிக்கை
துபாய்:
ஈராக் மீதான அமெரிக்கத் தாக்குதல் மனித குலத்துக்கு எதிரான வெட்கக்கேடான தாக்குதல் என அதிபர் சதாம்ஹூசேன் வர்ணித்துள்ளார். அமெரிக்காவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுமாறு தனது வீரர்களுக்கும்மக்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்க விமான- ஏவுகணைத் தாக்குதல் தொடங்கி 3 மணி நேரம் கழித்து ஈராக் தொலைக் காட்சியில் சதாம்ஹூசேன் பேசினார். ராணுவ உடையில் இருந்தார் அவர். பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரது பேச்சு ஏதோஒரு இடத்தில் பதிவு செய்யப்பட்டு பின்னர் ஈராக் தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்பட்டதாகத் தெரிகிறது.
தொலைக் காட்சியில் சதாம் பேசியதாவது: ஈராக்கை அநியாயமான முறையில் எதிரிகள் தாக்கி வருகின்றனர்.உங்கள் நாட்டை பாதுகாக்க ராணுவத்தினருடன் சேர்ந்து நீங்களும் (பொது மக்களும்) போராடுங்கள். இறுதியில்வெற்றி நமக்க்குத்தான். இறைவன் நம் பக்கமே இருக்கிறான்.
ஈராக் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான இந்தத் தாக்குதலை முறியடிப்போம். இங்கு ஊடுருவ முயலும்அமெரிக்கர்களை துரத்தி அடிப்போம். இது ஒரு புனிதப் போர். கோழைத்தான இந்தத் தாக்குதலை நாம் வென்றுகாட்டுவோம்.
இஸ்லாமுக்கு எதிரான யூதர்களின் போர் தான் இது. இதில் அவர்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்காது. உங்கள்வாள்களைக் கூர்மையாக்குங்கள். எதிரியை வெட்டிச் சாய்திடுங்கள். ஈராக்கில் நுழையும் அமெரிக்கப்படைகளுக்கு அவர்கள் சிறிதும் எதிர்பார்க்காத எரிமலை காத்திருக்கிறது.
இவ்வாறு சதாம் ஹூசேன் பேசினார்.


