For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

10 மணி நேரம் இடைவிடாது குண்டு வீச்சு: பற்றி எரிகிறது பாக்தாத்

By Staff
Google Oneindia Tamil News

பாக்தாத்:

ஈராக்கின் மீது மிக பயங்கர குண்டு வீச்சுத் தாக்குதலை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து சுமார் 10 மணிநேரம் 1,000க்கும் அதிகமான குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக பென்டகன் கூறியுள்ளது.

நேற்று முன் தினமும் 40 குண்டுகள் வீசப்பட்டன. ஆனால், நேற்றிரவு முதல் ஆயிரக்கணக்கான குண்டுகள் ஈராக்தைஇடைவிடாது தாக்கி வருகின்றன. ஈராக் வீரர்கள் அமெரிக்கா எதிர்ப்பார்த்ததை விடவும் அதிக தீவிரத்துடன்மோதி வருவதால் இந்த குண்டு வீச்சு தொடங்கப்பட்டுள்ளது.

Shock and awe bombardments என்ற பெயரில் இந்த அதிர்ச்சி மற்றும் ஆச்சரியமான குண்டு வீச்சு நடந்துவருகிறது. குறிப்பாக பாக்தாத், பாஸ்ரா, மொசுல் ஆகிய நகரங்களைக் குறி வைத்து இத் தாக்குதல் நடக்கிறது.

அதிலும் பாக்தாத் நகரம் தான் மிகத் தீவிரமான குண்டுவீச்சுக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்காவின் டாமஹாக்ஏவுகணைகள், பி1, பி2, பி-52 குண்டு வீச்சு விமானங்கள், எப்-117 விமானங்கள், பிரிட்டனின் சீ ஹேரியர்விமானங்கள் ஆகியவை இந்தத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இதில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாயின. பாக்தாத் நகரமே தீப் பற்றி எரிந்து வருகிறது.

அதிபர் சதாம் ஹூசேனின் மாளிகை, அவரது குடும்பத்தினரின் மாளிகைகள் இந்த குண்டு வீச்சில்தரைமட்டமாயின. நேற்றிரவு 2 மணி நேரம் தொடர்ந்து இடைவிடாது குண்டுகள் தாக்கிய வண்ணம் இருந்ததால்பாக்தாத் நகரமே புகை மூட்டத்திலும் பீதியிலும் ஆழ்ந்தது.

இதைத் தொடர்ந்து குண்டு வீச்சு கொஞ்சம் தளர்ந்தது. ஆனாலும் இரவு முழுவதும் குண்டுகள் வந்து விழுந்தன.இந்த குண்டு வீச்சு இன்று காலையும் தொடர்ந்து கொண்டுள்ளது. காலை 5.30 மணிக்கு 3 ஏவுகணைகள்பாக்தாதைத் தாக்கின. நேற்று முதல் யு.எஸ்.எஸ். கிட்டி ஹாக் விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து மட்டும் 320ஏவுகணைகள் ஈராக் மீது ஏவப்பட்டுள்ளதாக அதன் கமாண்டர் கூறியுள்ளள்.

207 ஈராக்கியர்கள் காயம்:

அமெரிக்கா தொடங்கியுள்ள அதிபயங்கர குண்டு வீச்சில் 207 மக்கள் காயமடைந்துள்ளதாக ஈராக் கூறியுள்ளது.இவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள், பெண்களாவர்.

காயமடைந்தவர்கள் 5 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சி.என்.என். நிருபர் வெளியேற்றம்:

இதற்கிடையே அமெரிக்காவின் சி.என்.என். தொலைக்காட்சியின் நிருபர்களை உடனே பாக்தாதை விட்டுவெளியேறுமாறு ஈராக் உத்தரவிட்டுள்ளது.

சி.என்.என். நிருபர்கள் அமெரிக்க- பிரிட்டிஷ் படையினரின் வாகனங்களிலேயே தெற்கு ஈராக்குக்குள்நுழைந்துள்ளனர். போர் முனை செய்திகளை அவர்கள் நேரடியாக வழங்கி வருகின்றனர். அதே போல பாக்தாத்நகருக்குள்ளும் சி.என்.என். நிருபர்கள் செய்தி சேகரித்து வந்தனர். இப்போது அவர்களை ஈராக்வெளியேற்றியுள்ளது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X