10 தமிழ் தீவிரவாதிகள் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு
சென்னை:
தமிழர் விடுதலைப் படையின் தலைவர் மாறன் உள்ளிட்ட 10 தமிழ் தீவிரவாதிகள் மீது நீதிமன்றத்தில்குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.
கடந்த 1993ம் ஆண்டு நவம்பர் மாதம் கடலூர் மாவட்டம் குள்ளஞ் சாவடி காவல் நிலையம் மீதுநடந்த தாக்குதல் தொடர்பாக இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மீதானவிசாரணை சென்னையில் உள்ள சிறப்பு தடா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
மாறன், ரேடியோ வெங்கடேசன் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாறனுக்கும்சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. வீரப்பனுடன் சில காலம்இருந்துள்ளார் மாறன்.
இந்நிலையில் மாறன் உள்ளிட்ட 10 தமிழ் தீவிரவாதிகள் மீதும் நேற்று குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டன. நீதிபதி பாஸ்கரன்குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்தார்.
1994ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.


