நடிகர் ராஜ்குமாருக்கு மூட்டு ஆபரேஷன் நடந்தது
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமாருக்கு இன்று காலை சென்னை மருத்துவமனையில் வலது கால் மூட்டு மாற்றுஅறுவைச் சிகிச்சை நடந்து முடிந்தது.
கடந்த 13ம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் ராஜ்குமாருக்கு இடுப்பு மாற்று அறுவைச்சிகிச்சை நடைபெற்றது. இதையடுத்து அவர் சிறிது சிறிதாக உடல் நலம் தேறி வந்தார்.
மேலும் அவருடைய வலது கால் மூட்டில் மற்றொரு அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்படும்என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
அதன்படி இன்று காலை ராஜ்குமாருக்கு வலது கால் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.மூட்டு அறுவைச் சிகிச்சை நிபுணரான டாக்டர் பி.வி.ஏ. மோகன்தாஸ் தலைமையில் இந்த அறுவைச்சிகிச்சை நடைபெற்றது.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட "மொபைல் பேரிங்" என்று அழைக்கப்படும் செயற்கை மூட்டுராஜ்குமாரின் வலது காலில் பொருத்தப்பட்டது.
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் ராஜ்குமார் நலமுடன் இருப்பதாகவும், இன்று மாலை அவர்தன்னுடைய நடைப் பயிற்சியைத் தொடங்குவார் என்றும் டாக்டர் மோகன்தாஸ் தெரிவித்தார்.
மேலும் அடுத்த 10 நாட்களில் ராஜ்குமார் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் என்றும் டாக்டர் மோகன்தாஸ்கூறினார்.


