• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சட்டசபையில் ஸ்டாலின் சராமாரி கேள்வி: சளைக்காமல் ஜெ. பதில்

By Staff
|

சென்னை:

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் விதமாக தமிழக அரசின் பட்ஜெட் உள்ளதாக திமுகஎம்.எல்.ஏவும் சென்னை மாநகர முன்னாள் மேயருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.

சட்டசபையில் கேள்வி நேரத்திற்குப் பிறகு பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் கலந்து கொண்டுஸ்டாலின் பேசினார். அப்போது அதிமுக அரசுக்கு எதிராகப் பல கேள்விகளை அவர் எழுப்பினார்.அதற்கு ஜெயலலிதாவும் அமைச்சர்களும் தக்க பதில்களை உடனுக்குடன் கொடுத்தனர். அதன்விவரம்:

ஸ்டாலின்: அதிக கடன் வாங்குவது பெரும் குழப்பத்தை விளைவிக்கும் என்று கூறிவிட்டு, உலகவங்கியிடமிருந்து பல்லாயிரம் கோடி கடன் வாங்க இருப்பதாகக் கூறியுள்ளீர்களே. நீங்கள்வாங்கினால் குழப்பம் விளையாதா? கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு இந்தஆண்டு குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்?

நிதி அமைச்சர் பொன்னையன்: சிக்கன நடவடிக்கை காரணமாகவே நிதி குறைக்கப்பட்டுள்ளது.மற்றபடி ஒட்டு மொத்தமாக அந்தத் திட்டங்கள் கைவிடப்படவில்லை.

ஸ்டாலின்: 385 ஊராட்சிகளில் தலா ரூ.1 கோடி செலவில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்றுகடந்த முறை கூறப்பட்டது. அது என்னவாயிற்று?

ஜெயலலிதா: கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தலா இரண்டு கிராமங்களில்அந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் ஒரு கிராமத்தில் இந்தத் திட்டம்நடைமுறையில் உள்ளது.

ஸ்டாலின்: விபத்து சிகிச்சை மையங்கள் எல்லாம் என்னவாயின?

ஜெயலலிதா: 11க்கும் மேற்பட்ட சிகிச்சை மையங்கள் தொடங்கிச் செயல்பட்டுக் கொண்டுதான்உள்ளன.

ஸ்டாலின்: ரேஷன் அரிசி, பஸ் கட்டணம் உள்ளிட்ட பல கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.உழவர் சந்தைகள் மூடப்பட்டு வருகின்றன. அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் அறிவிப்போடு சரி.எல்லாவற்றுக்கும் மேலாக 19 பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர்.

ஜெயலலிதா: பட்டினிச் சாவு ஒன்று கூட நிகழவில்லை. பட்டினியால் யாரும் இறந்து விடக் கூடாதுஎன்பதற்காகத்தான் முதலில் சமைத்த உணவையும், தற்போது மாதம் 30 கிலோ இலவசஅரிசியையும் 14 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம்.

துரைமுருகன் (திமுக): பட்டினியால் சாக வேண்டும் என்று யாரும் நினைக்க மாட்டார்கள். அனைத்துஎதிர்க் கட்சிகளும், பத்திரிக்கைகளும் பட்டினிச் சாவு நடந்ததாகத்தானே கூறியுள்ளனர். முதல்வர்மட்டுமே இதை மறுக்கிறார். ஆனால் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஜெயலலிதா: எதிர்க் கட்சிகளும், பத்திரிக்கைகளும் கூறுவதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது.சாத்தான்குளத்தில் அதிமுக வெற்றி பெறாது என்று எதிர்க் கட்சிகளும், பத்திரிக்கைகளும்கூறினார்கள். என்ன ஆயிற்று? அதுபோலத்தான் இதுவும்.

ஸ்டாலின்: சென்னை மாநகர வளர்ச்சித் திட்டங்களுக்காக கடந்த திமுக ஆட்சியின்போதுஒதுக்கப்பட்ட நிதி விவரம் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்றுஅதிமுக உறுப்பினர் ராதாரவி கூறினார். அதை நானும் வரவேற்கிறேன். நிச்சயம் விசாரணைக்கமிஷன் அமைத்து உண்மை நிலையை வெளிக் கொண்டுவர வேண்டும்.

ஜெயலலிதா: மாநகராட்சி மன்றத்தில் பேச வேண்டியதை இங்கே பேசி நேரத்தை வீணடிக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஸ்டாலின்: மகளிர் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றார்கள். அதுகுறித்து தொடர் நடவடிக்கைஎதையும் காணவில்லையே?

சட்ட அமைச்சர் ஜெயக்குமார்: சென்னை மற்றும் கோயம்புத்தூரில் ஏற்கனவே மகளிர்நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. விரைவில் படிப்படியாக மற்ற பகுதிகளிலும் மகளிர்நீதிமன்றங்கள் ஆரம்பிக்கப்படும்.

இவ்வாறு ஸ்டாலின் கேட்ட கேள்விகளுக்கு ஜெயலலிதாவும், அமைச்சர்களும் பதில் அளித்தனர்.கடைசியாக, "இந்த பட்ஜெட் மக்கள் நலத் திட்டங்களைப் பிரதிபலிப்பதாக உள்ளது. ஏற்கனவேவறட்சி மற்றும் பட்டினிச் சாவுகள் காரணமாக நொந்து போயுள்ள மக்களைத் துன்புறுத்தும் விதமாகவெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் பட்ஜெட்டாகத்தான் இது அமைந்துள்ளது" என்று கூறி தன்பேச்சை முடித்துக் கொண்டார் ஸ்டாலின்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X