கூடல் எக்ஸ்பிரசில் புதிய கேன்டீன் பெட்டி இணைப்பு
மதுரை:
சென்னை-மதுரை-குருவாயூர் இடையிலான கூடல் எக்ஸ்பிரஸ் ரயிலில் புதிய உணவகப் பெட்டியைமத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி தொடங்கி வைத்தார்.
சென்னை-மதுரை இடையே இயக்கப்பட்டு வந்த கூடல் நகர் எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது குருவாயூர்வரை நீட்டிக்கப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
நீண்ட தூர ரயிலான இதில் உணவகப் பெட்டி இல்லாதது பயணிகளிடையே குறையைஏற்படுத்தியது. உணவகப் பெட்டி வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்று தற்போது உணவகப் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இதை மதுரையில்அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்,
ரயில்வே போன்ற பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் அனைத்துக் கட்சியினரும்ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் மக்களுக்குத் தேவையான வசதிகள்உடனடியாகக் கிடைக்கும்.
மதுரை-ராமேஸ்வரம், திருச்சி-மானாமதுரை அகலப் பாதைப் பணிகள் கடந்த பல வருடங்களாகக்கிடப்பில் போடப்பட்டிருந்தன. இப்போது நெருக்கடி கொடுத்து கொடுத்து பணிகள்துவங்கியுள்ளன. நிதியும் ஒதுக்கப்பட்டுவருகிறது.
ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் பிறந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அகலப் பாதை இருக்கவேண்டும் என்பதில் ரயில்வே அமைச்சர் நிதிஷ் குமார் மிகவும் ஆவலாக உள்ளார் என்றார் மூர்த்தி.
முன்னதாக பரமக்குடி, மானாமதுரை ஆகிய ரயில் நிலையங்களில் கம்ப்யூட்டர் டிக்கெட் முன்பதிவுவசதியை மூர்த்தி தொடங்கி வைத்தார்.


