அகழ்வாராய்ச்சி பணி: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
டெல்லி:
அயோத்தியில் ராமர் கோவில் இருந்ததா என்பதைக் கண்டறிவதற்காக நடைபெறும்அகழ்வாராய்ச்சிப் பணிகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொள்ள உச்சநீதிமன்றம் இன்று மறுத்து விட்டது.
ராமர் கோவில் இருந்ததா என்பதைக் கண்டறியும் பொருட்டு அங்கு அகழ்வாராய்ச்சிப் பணிகளைமத்திய அரசு நடத்த வேண்டும் என்று கடந்த 5ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து மத்திய தொல்பொருள் துறை ஆராய்ச்சியாளர்கள் அயோத்தியில் சர்ச்சைக்குரியஇடத்தைத் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே சர்ச்சைக்குரிய இடத்தைத் தோண்ட வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின்உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் நாவித் யார் கான் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.
"சர்ச்சைக்குரிய இடத்தில் எந்தப் பணியும் நடக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவேஉத்தரவிட்டுள்ளது. அப்படி இருக்கும்போது அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கு மட்டும் எப்படிஉத்தரவிடலாம்?" என்று தன் மனுவில் கேள்வி எழுப்பியுள்ள நவித் யார் கான், எனவே அந்தஉத்தரவை மறு பரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தைக்கோரியுள்ளார்.
மேலும் தான் ஒரு முஸ்லீம் என்ற முறையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் தன்னுடையஅடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் நாவித் யார் கான் தன் மனுவில்கூறியிருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது அதை ஏற்றுக் கொள்ள உச்ச நீதிமன்ற பெஞ்ச் மறுத்துவிட்டது. ஒரு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும்என்று கோரும் மனுவை நாங்கள் எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று நீதிபதி ராஜேந்திர பாபுமற்றும் நீதிபதி மாத்தூர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறிவிட்டது.
ஆனாலும், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வேறொரு சிறப்பு வழக்கைவேண்டுமானால் தனிப்பட்ட முறையில் தாக்கல் செய்யலாம் என்றும் கூறிய நீதிபதிகள், நாவித் யார்கானின் மனுவில் ஆட்சேபத்திற்குரிய சில வாசகங்கள் இருப்பதையும் சுட்டிக் காட்டினர்.
மேலும் இந்த விவகாரத்தில் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுவதாகக் கூறப்படும் புகாருக்கும்இடமே இல்லை என்று கூறினர்.
இதையடுத்து தனிப்பட்ட வழக்கைத் தாக்கல் செய்வது தொடர்பாக ஒரு வாரம் கால அவகாசம்வேண்டும் என்று மனுதாரர் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அடுத்த ஒரு வாரத்திற்குள் ஆட்சேபத்திற்குரிய வாசகங்களைத் திருத்தி விட்டுமனு தாக்கல் செய்யலாம் என்று உத்தரவிட்டனர்.


