வைகோ கைது: 29ல் அனைத்து கட்சி உண்ணாவிரதம்- கருணாநிதி தொடங்கி வைக்கிறார்
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளரான வைகோவைவிடுவிக்கக் கோரி வரும் 29ம் தேதி நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி வைக்கப்போவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி முரசொலியில் எழுதியுள்ள கடிதத்தில்,
சுமார் 250 நாட்களாக அருமைத் தம்பி வைகோ வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இடையில் அவரை ஒரு நாள் சந்தித்தேன்.
அப்போது எங்கள் இருவரின் கண்ணீர் கலந்த நேரமும், நாங்கள் இருவருமே பேசாமல் பேசிக்கொண்ட நேரமும்தான் முக்கியமான நேரமாகும்.
அந்தத் துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல்தான் தோழமைக் கட்சிகளுடன் பேசிஉண்ணாவிரதப் போராட்டத்திற்கு முடிவெடுத்தோம்.
பொடா சட்டம் நாடாளுமன்றத்தில் அறிமுகமானபோதே திமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக்கூட்டணியில் உள்ள சில கட்சிகளும், வேறு பல கட்சிகளும் அதைக் கடுமையாக எதிர்த்தன.எதிரிகளை நசுக்குவதற்காகவும், அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்காகவும் இந்தச் சட்டம்தவறாகப் பயன்படுத்தக் கூடும் என்று ஐயங்களை எழுப்பினோம்.
ஆனால் இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படாது என்று நாடாளுமன்றத்திலேயே துணைப் பிரதமர்அத்வானி உறுதி அளித்தார். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள மதிமுகவின் பொதுச்செயலாளரும் தமிழகத்தின் மிக முக்கிய எம்.பியுமான வைகோவே இந்தச் சட்டத்தால் தவறாகக்கைது செய்யப்பட்டுள்ளாரே.
மேலும் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவரான பழ. நெடுமாறனும் அரசியல் பழிவாங்கும்நோக்கத்துடனேயே பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதி அளித்ததற்கு மாறாக,வைகோவையும் நெடுமாறனையும் கைது செய்து 250 நாட்களாகத் துன்புறுத்த வேண்டியஅவசியம் என்ன?
அத்துடன் விட்டார்களா? 15 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்குகளையும் தோண்டி எடுத்துஅவர்களை மூலைக்கு மூலை நீதிமன்றங்களுக்கு அலைக்கழிக்கிறார்களே. மனித உரிமையில்அக்கறையுடையவர்கள், மனித நேயத்தில் ஒன்றிப் போனவர்கள் இந்தக் கொடுமைகளைஎப்படித்தான் பொறுத்துக் கொள்ள முடியும்?
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதைத் தெரிவிக்கும் வகையில்தான், இந்தக் கைதுகளைக்கண்டித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நாங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அந்தத்தீர்மானத்தை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக 29ம் தேதி தமிழகம்முழுவதும் உண்ணாவிரதம் மேற்கொள்வது என்றும் முடிவெடுத்துள்ளோம்.
சென்னையில் அன்று நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தை நானே தொடங்கி வைக்கஉள்ளேன். இதேபோல் மற்ற கட்சித் தலைவர்களும் தமிழகத்தின் பல பகுதிகளிலும்உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைப்பார்கள், அல்லது முடித்து வைப்பார்கள்.
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுகவினர்திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்கருணாநிதி.


