For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1989 சம்பவம்: ஜெ.-அன்பழகன் நேருக்கு நேர் மோதல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கடந்த 1989ல் திமுக ஆட்சியில் இருந்தபோது தமிழக சட்டசபையில் தற்போதைய முதல்வர்ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து இன்றைய சட்டசபைக் கூட்டத்தில் அவரும்சட்டசபை திமுக தலைவரான அன்பழகனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர்.

சட்டசபை கூட்டத் தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்ந்தது.திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி தன்னுடைய விவாதத்தின்போது பேசுகையில்தொல்காப்பியத்திலிருந்து ஒரு பாடலை எடுத்துப் பாடினார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய ஜெயலலிதா, தன்னுடைய ஆற்றாமை மற்றும் இயலாமைகாரணமாகத்தான் திமுக தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வர பயப்படுகிறார் என்றும், ஆனால்தொல்காப்பியத்துக்கு உரை மட்டும் எழுதுகிறார் என்றும் கேலியாகக் கூறினார்.

துரைமுருகனுடன் மோதல்...

ஆனால் ஜெயலலிதா பேசியதை சட்டசபை திமுக துணைத் தலைவர் துரைமுருகன் இதைக்கடுமையாக மறுத்தார். மேலும், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., ஏன் ஜெயலலிதாவும் கூட இதற்குமுன் சட்டசபைக் கூட்டங்களைப் புறக்கணித்துள்ளார்களே என்றும் துரைமுருகன் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்து ஜெயலலிதா பேசுகையில்,

இதே சபையில் எம்.ஜி.ஆர். தாக்கப்பட்டார். அவர் மீது செருப்புக்களும் வீசப்பட்டன. அதேபோல்1989ம் ஆண்டு சட்டசபையில் என்ன நடந்தது என்பதை நாடே அறியும். அப்போது சட்டசபையில்துரைமுருகன் என் சேலையைப் பிடித்து இழுத்தார். இதனால் என் சேலை கூடக் கிழிந்து விட்டது.

இதை எல்லாம் நான் இங்கு சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் நீங்கள்என்னைச் சொல்ல வைக்கிறீர்கள்.

அப்போது நான் மிகவும் அவமானப்படுத்தப் பட்டேன். ஆளுங்கட்சியினர் அப்போ என்னிடம்கண்ணியமாக நடந்து கொள்ளவில்லை. இவ்வாறு அப்போதைய திமுக ஆட்சியில் பாதுகாப்பற்றநிலைமை இருந்ததால்தான் நான் சட்டசபைக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் இருந்தேன்.

ஆனால் உங்கள் தலைவருக்கு அப்படி ஒன்றும் நடக்கவில்லையே? அவர் ஏன் பயந்து ஒதுங்குகிறார்என்றார் ஜெயலலிதா.

துரைமுருகன் பதில்:

இதையடுத்து பேசிய துரைமுருகன், "நீங்கள் கூறுவது தவறு. நான் உங்களைத் தாக்கவே இல்லை.நீங்கள் கூறும் இடத்திலிருந்து நான் அதிக தூரத்தில் இருந்தேன்" என்றார்.

"அங்கே இருந்திருக்கலாம். ஆனால் இடத்தை விட்டு முன்னேறி வந்து என்னைத் தாக்கினீர்களே.அவமானகரமாக நடந்து கொண்டீர்களே. அப்போது அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகமும்மேஜை மீது ஏறி என்னை நோக்கி ஓடி வந்தாரே" என்றார் ஜெயலலிதா.

துரைமுருகனும் விடாப்பிடியாக, "கிரிமினல் முதல்வர் என்றும், குத்துங்கடா என்றும் நீங்கள்தான்கூறினீர்கள். உடனே எங்கள் தலைவர் கருணாநிதியை அதிமுகவினர் தாக்கினர். அடித்துகண்ணாடியை உடைத்தனர்" என்றார். இதை ஜெயலலிதா மறுத்தார். "நீங்கள் சொல்வது போல்அன்றைக்கு நான் எதுவும் கூறவில்லை. கருணாநிதியின் கண்ணாடியை உடைக்கவும் இல்லை.அன்றும் பொய் பேசினீர்கள். இன்றும் பொய் பேசுகிறீர்கள்" என்றார் ஜெயலலிதா.

அன்பழகனுடன்...

இந்நிலையில்தான் அன்பழகன் குறுக்கிட்டார். அவர் பேசுகையில்,

அனைவரும் உணர்ச்சி வசப்படக் கூடிய அளவில் பேச வேண்டும் என்பதற்காகவே ஜெயலலிதாஉண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறுகிறார். அவர் கூறுவது மிகைப்படுத்தப்பட்ட கற்பனை.

அன்று சட்டசபையில் நானும் இருந்தேன். ஜெயலலிதா கூறுவது போல் எந்தச் சம்பவமும் அன்றுநடக்கவில்லை. அன்றைக்கு ஒரு ஆவேசமான சூழ்நிலை நிலவியது. அவ்வளவுதான்.

அன்று கருணாநிதி பட்ஜெட்டைப் படித்தபோது "டோன்ட் ரீட், யூ கிரிமினல் டோன்ட் ரீட்" என்றுகுரல் கேட்டது. அதை யார் கூறினார்கள் என்று நான் கூற விரும்பவில்லை. அதன் பின்னர்தான்அசம்பாவிதம் நடந்தது.

அந்த அசம்பாவித சம்பவத்தில் தன் கை உடைந்து விட்டதாக காங்கிரஸ் தலைவரான குமரிஅனந்தன் கையில் கட்டுப் போட்டுக் கொண்டு வந்தார். இன்னும் இரண்டு நாள் கழித்து மற்றொருகையிலும் கட்டுப் போட்டிருந்தார்.

இப்படித்தான் அந்தச் சமயத்தில் நடந்ததே தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. அன்றைக்குஉங்களோடு இருந்த திருநாவுக்கரசர் அதன் பின்னர் சட்டசபையிலேயே அன்று என்ன நடந்ததுஎன்பதை விளக்கிப் பேசியுள்ளார். அதைப் படித்தாலே உண்மை நிலை தெரியும் என்றார்அன்பழகன்.

ஜெ. பதில்:

ஆனால் ஜெயலலிதா விடவில்லை. அவர் பேசுகையில்,

நான் சொல்வதுதான் உண்மை. என்னைக் கடுமையாகத் தாக்கினார்கள். அதற்கு நன்றாகஅனுபவித்து விட்டார்கள். அடுத்து வந்த சட்டசபைத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும்திமுக கடும் தோல்வியைத் தழுவியது.

உண்மையை மறைக்க அன்று கூறியதையே இன்றும் கூறுகிறார்கள். அந்தச் சம்பவத்தை நேரில்பார்த்த இன்னொரு சாட்சி சாத்தூர் ராமச்சந்திரன் (சபையில் இருந்த அவரைச் சுட்டிக் காட்டுகிறார்ஜெயலலிதா).

ஆனால் அவர் இப்போது திமுகவில் இருப்பதால் உண்மை பேச மாட்டார் (ராமச்சந்திரன்அமைதியாகவே அமர்ந்திருந்தார்).

இந்தப் பழங்கதைகளை எல்லாம் பேச வேண்டிய அவசியமோ, ஆதாயமோ எனக்கு இப்போதுஏற்பட்டிருக்கவில்லை. ஆனாலும் உண்மை நிலையை விளக்குவதற்காகத்தான் இவ்வளவும்கூறினேன் என்றார் ஜெயலலிதா.

இதைத் தொடர்ந்து மீண்டும் பதிலளித்த அன்பழகன், "நீங்கள் அன்று பதற்றத்துடன் இருந்தீர்கள்.நான் அப்படி இல்லை. நேருக்கு நேர் அனைத்தையும் மிக அருகில் இருந்து பார்த்துக் கொண்டுதான்இருந்தேன். நீங்கள் கூறுவது போல் எதுவும் நடக்கவில்லை" என்றார்.

இதையடுத்து அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிக் கொண்டனர்.இதனால் அவையில் சிறிது நேரத்திற்குப் பெரும் அமளி ஏற்பட்டது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X