வண்டலூர் அருகே மாற்றப்படும் ராணி மேரி கல்லூரி?
சென்னை:
தலைமைச் செயலகம் கட்டுவதற்காக சென்னை மெரீனா கடற்கரையோரம் உள்ள ராணி மேரி கல்லூரியைஇடிப்பதற்கு அகில இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாணவர் சங்கத்திலிருந்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில்,
இந்த நடவடிக்கையை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் ராணி மேரி கல்லூரிமாணவிகளுக்காக மற்ற கல்லூரி மாணவர்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
நாட்டில் பஞசம், வேலையின்மை ஆகியவை பெரும் பிரச்சினைகளாக இருக்கும்போது தேவையில்லாத இந்தப்பிரச்சினையை உருவாக்குவதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராணி மேரி கல்லூரியை இடிப்பதை அனுமதிக்க முடியாது என்றுஅவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி ராணி மேரி கல்லூரி மாணவிகள், ஆசிரியைகள் ஆகியோர் கல்லூரி வளாகத்தில்ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ராணி மேரி கல்லூரியை சென்னைக்கு அருகே உள்ள வண்டலூர் அருகே மாற்றுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாகத்தற்போது கூறப்படுகிறது.


