பாப்பாபட்டி, நாட்டாமங்கலம்... ""தொடரும்""
மதுரை:
மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, நாட்டாமங்கலம் பஞ்சாயத்து யூனியன் இடைத் தேர்தலில் வழக்கம் போல யாரும்வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை. இதனால், அங்கு இடைத் தேர்தல் நடைபெறாது எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் ஆகிய மூன்று கிராமப் பஞ்சாயத்து யூனியன்களும் நாடு முழுவதும்சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. தேவர் சமூகத்தினர் பெரும்பான்மையாக வாழும் இப்பகுதிகள்தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதியாக மாற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து தங்களுக்குத் தலைமை தாங்கப் போவது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரா என்றகொதிப்பில் தேர்தலை நடத்த விடாமல் செய்து விட்டனர். இது கடந்த ஏழு ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் மீண்டும் ஒரு முயற்சியாக இங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. வரும் ஏப்ரல் 7ம் தேதி இங்குஇடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
மாவட்ட கலெக்டர், போலீஸ் எஸ்.பி. என பல்வேறு அதிகாரிகள் மூன்று கிராமங்களுக்கும் சென்றுபொதுமக்களிடம் பேசினர். இருப்பினும் பலன் இல்லை. வேட்பு மனுத் தாக்கல் செய்ய நேற்றுதான் கடைசி நாள்.
ஆனால் பாப்பாபட்டி, நாட்டாமங்கலத்தில் ஒருவர் கூட வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை. இதனால் அங்குதேர்தல் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு கிராமப் பஞ்சாயத்துக்கள் தொடர்ந்து தலைவர், உறுப்பினர் இல்லாமலேயே இயங்கும் சூழ்நிலையும்ஏற்பட்டுள்ளது.
கீரிப்பட்டியில் மட்டும் இரண்டு பேர் (இருவரது பெயரும் சுப்பன்) மனுத் தாக்கல் செய்துள்ளனர். இருப்பினும்இவர்களும் விரைவில் மனுக்களை வாபஸ் பெற்று விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


