கறுப்பு பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு வந்த திமுக எம்.எல்.ஏக்கள்
சென்னை:
நேற்று சட்டசபையிலிருந்து தங்களை குண்டுக்கட்டாக வெளியேற்றிய சம்பவத்தைக் கண்டிக்கும்வகையில் திமுக எம்.எல்.ஏக்கள் இன்ற கறுப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு சட்டசபைக்குவந்திருந்தனர்.
கடந்த 1989ல் சட்டசபையில் முன்னாள் திமுக அமைச்சரான துரைமுருகன் தன் சேலையைப் பிடித்துஇழுத்த சம்பவம் குறித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று பேசினார். ஆனால் இதுகுறித்து விளக்கம்அளிக்க திமுக உறுப்பினர்களான துரைமுருகன் மற்றும் சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் முயன்றனர்.
ஆனால் சபாநாயகர் காளிமுத்து அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து திமுகவினர்கோஷங்களை எழுப்பி கலாட்டா செய்தனர். இதைத் தொடர்ந்து அவைக் காவலர்களை அழைத்துதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்டார் காளிமுத்து.
இதன் பின்னர் உள்ளே நுழைந்த அவைக் காவலர்கள் திமுக இளைஞரணிச் செயலாளரானஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட அக்கட்சி எம்.எல்.ஏக்களை குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டுவெளியே சென்று விட்டனர்.
சட்டசபையில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இந்தச் சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில்திமுக உறுப்பினர்கள் இன்று கறுப்பு பேட்ஜ் அணிந்து கொண்டுதான் சட்டசபைக்குச் செல்வார்கள்என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி நேற்று நிருபர்களிடம் கூறியிருந்தார்.
அதன்படி இன்று காலை சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த திமுக எம்.எல்.ஏக்கள்அனைவரும் கறுப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு வந்திருந்தனர்.
திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைஎம்.எல்.ஏவான ப. ரங்கநாதனும் இன்று கறுப்பு பேட்ஜ் அணிந்திருந்தார்.


