போராட்டம்... போராட்டம்... போராட்டம்!!!
சென்னை:
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் உண்ணாவிரதம், கடையடைப்பு உள்ளிட்ட பல்வேறுபோராட்டங்கள் நடைபெறவுள்ளன.
பொடா சட்டத்தின் கீழ் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது, மின் கட்டண உயர்வு, இலவசமின்சாரம் ரத்து, மதிப்புக் கூட்டிய வரி விதிப்பு ஆகியவற்றை எதிர்த்து பல்வேறு கட்சிகள்,சங்கங்கள், அமைப்புகள் போராட்டங்களை நடத்த உள்ளன.
தங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து அரசு ஊழியர்கள்மற்றும் ஆசிரியர்களும் போராட்டத்திற்குத் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர். ஆனால் இன்னும்போராட்டத் தேதி அறிவிக்கப்படவில்லை.
வைகோ கைதைக் கண்டித்து வரும் 29ம் தேதி (நாளை மறுநாள்) திமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சியினர் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.சென்னையில் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தை திமுக தலைவர் கருணாநிதி தொடங்கிவைக்கவுள்ளார்.
சட்டசபையை முற்றுகையிடும் விவசாயிகள்:
இந்நிலையில் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து சட்டசபை முன்பு 10,000விவசாயிகளைத் திரட்டி மிகப் பெரும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழக விவசாயிகள்சங்கத் தலைவர் சிவசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தஞ்சையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இலவச மின்சாரத்தை ரத்து செய்ததைக் கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படவுள்ளன.அதில் ஒரு பகுதியாக ஆளுநரிடம் மனு கொடுக்க முடிவு செய்துள்ளோம்.
இதையடுத்து சென்னையில் சட்டசபை முன் 10,000 விவசாயிகளைத் திரட்டி மாபெரும் போராட்டம்நடத்தவும் முடிவு செய்துள்ளோம். ஏப்ரல் மாதம் இந்தப் போராட்டம் நடைபெறும்.
டெல்டா பகுதியில் நேரடி கொள்முதலை அரசு முறையாகவும் முழுமையாகவும் செய்ய வேண்டும்என்றார் சிவசாமி.
வணிகர்கள் 2 நாள் கடையடைப்பு:
இதற்கிடையே மதிப்புக் கூட்டிய வரி விதிப்பை எதிர்த்து வரும் 31ம் தேதி மற்றும் ஏப்ரல் 1ம் தேதிஆகிய நாட்களில் கடையடைப்பு நடத்த தமிழக வணிகர் சங்கங்கள் பேரவை முடிவு செய்துள்ளது.
திருச்சியில் நடந்த வணிகர் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பேரவைத்தலைவரான வெள்ளையன் நிருபர்களிடம் பேசுகையில்,
மதிப்புக் கூட்டிய வரி விதிப்பைக் கண்டித்து அகில இந்திய வணிகர் சங்கங்களின் அழைப்பை ஏற்றுதமிழகத்தில் வரும் 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் கடையடைப்பு நடத்த முடிவுசய்துள்ளோம்.
அதேபோல டெல்லியில் ஏப்ரல் 8ம் தேதி நடக்கவுள்ள அகில இந்திய வணிகர் சங்கப் பேரணியிலும்தமிழக வணிகர்கள் திரளாகக் கலந்து கொள்வார்கள். மதிப்புக் கூட்டிய வரி விதிப்பை வாபஸ்பெறும் வரையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும்.
மே 5ம் தேதி வணிகர் தினத்தை இம்முறை திருச்சியில் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதுஎன்றார் வெள்ளையன்.
லாரி உரிமையாளர்கள் போராட்டம்:
இதற்கிடையே சென்னை நகரில் லாரிகள் நுழையத் தடை விதித்திருப்பதற்குக் கண்டனம்தெரிவித்து ஏப்ரல் 1ம் தேதி போராட்டம் நடத்த லாரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
சென்னையில் பகல் நேரத்தில் லாரிகள் நுழைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு லாரிஉரிமையாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்தத் தடை உத்தரவுதொடர்ந்து அமலில் உள்ளது.
இந்நிலையில் நாமக்கல்லில் நடந்த லாரி உரிமையாளர்கள் மாநாட்டில் சென்னை போலீஸாரின்கெடுபிடிகளுக்கும், லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கும் கடும் கண்டனம்தெரிவிக்கப்பட்டது.
மேலும் இது தொடர்பாக சென்னை போலீஸாரைக் கண்டித்து ஏப்ரல் 1ம் தேதி போராட்டம்நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டங்கள் தவிர வேறு சில போராட்டங்களும் நடைபெறும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய தொடர் போராட்டங்களால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கையும் பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.


