For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணையை செலுத்தியது ரஷ்யா

By Staff
Google Oneindia Tamil News

மாஸ்கோ:

ஈராக் போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில் ரஷ்யா இன்று திடீரென கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிக சக்திவாய்ந்த டோபோல் என்ற ஏவுகணையைச் செலுத்து சோதனையிட்டது.

இது அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது. Topol RS-12M ICBMஎன்ற இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை ஏந்திக் கொண்டு சுமார் 15,000 கி.மீ. வரை செல்லக் கூடியது. உலகின்எந்த இலக்கையும் இந்த ஏவுகணையால் தாக்க முடியும்.

ரஷ்யாவின் அணு ஆயுதத் தாக்குதல் பிரிவு இந்தச் சோதனையை நடத்தியது. ரஷ்யாவின் விளாடிமிர்ஸ்கி ராணுவஏவுகணைப் பிரிவு போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்த ஏவுகணை சோதனைநடந்ததாக ரஷ்யா கூறியுள்ளது.

ரஷ்யாவின் வடக்குப் பகுதியில் பிளசட்ஸ்க் என்ற இடத்தில் உள்ள விண்வெளி ஏவுதளத்தில் மொபைல் லாஞ்சரில்இருந்த இந்த ஏவுகணை செலுத்தப்பட்டது. இந்த ஏவுகணை ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கொம்சட்காபகுதியில் வந்து விழுந்தது.

இந்த ஏவுகணைச் சோதனையை ரஷ்யா இப்போது நடத்தியிருப்பது பல நாடுகளையும் அதிர்ச்சியில்ஆழ்த்தியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் நெருக்கமாக இருந்தாலும்ரஷ்ய ராணுவம் தொடர்ந்து அமெரிக்க எதிர்ப்பு நிலையில் தான் உள்ளது.

இப்போது அமெரிக்காவும் பிரிட்டனும் சேர்ந்து கொண்டு உலக நாடுகளையும் மீறி ஈராக்கைத் தாக்கி வரும்நிலையில் தனது எதிர்ப்பை ராணுவம் இந்த வகையில் காட்டியுள்ளது.

மொபைல் லாஞ்சர்கள் எனப்படும் நடமாடும் வாகனங்களில் இருந்து இந்த ஏவுகணையைச் செலுத்த முடியும்.1970களில் ரஷ்யா தயாரித்த முதல் மொபைல் லாஞ்சர் ஏவுகணை இது தான்.

இந்திய அதிகாரி ரஷ்யா விரைவு:

இதற்கிடையே ஈராக்கில் நடந்து வரும் தாக்குதல் காரணமாக இந்தியா, ரஷ்ய நாடுகளின் பாதுகாப்புக்கு ஏற்பட்டுபிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்க இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் கபில் சிபல் மாஸ்கோவிரைந்துள்ளார்.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் இகார் இவானோவ் மற்றும் மூத்த ராணுவ, வெளியுறவுத்துறைஅதிகாரிகளுடன் சிபல் ஆலோசனை நடத்துவார். ஈராக் போர் நிலவரம் குறித்து பிரதமர் வாஜ்பாயும் ரஷ்ய அதிபர்புடினும் தொலைபேசி மூலம் அடிக்கடி விவாதித்து வருகின்றனர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X