For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அல்-ஜசீரா டி.வி மீது பாயும் அமெரிக்கா

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

ஈராக்கிய படைகளின் சிறிய வெற்றிகளைக் கூட அல்- ஜசீரா அரேபியத் தொலைக்காட்சி பெரிதுபடுத்திக்காட்டுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் கூறியுள்ளார்.

கத்தார் நாட்டுத் தொலைக்காட்சியான அல்-ஜசீரா ஆப்கானிஸ்தான் போரின்போது உலகம் முழுவதும் பெரும்வரவேற்பைப் பெற்றது. ஆப்கானிஸ்தானுக்குள் சி.என்.என்., பாகஸ் நியூஸ், பி.பி.சி. ஆகியவை நுழைய முடியாதநிலை இருந்தபோது அந்த நாட்டுக்குள் இருந்தவண்ணம் லைவ் ரிலே செய்தது அல் ஜசீரா.

இப்போது சி.என்.என், பி.பி.சி., பாக்ஸ் நியூஸ் ஆகியவற்றின் நிருபர்கள் அமெரிக்க- பிரிட்டிஷ் படைகள்,கப்பல்கள், விமானங்களில் இருந்தவண்ணம் போர் குறித்த செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகின்றனர்.ஆனால், ஈராக்கிய ராணுவத்தி வெற்றிகளை இருட்டடிப்பு செய்து வருகின்றன. பி.பி.சி. கொஞ்சம் நடுநிலையுடன்உள்ளது.

ஆனால், சி.என்.என்., பாக்ஸ் நியூஸ் ஆகியவை அமெரிக்க- பிரிட்டிஷ் வீரர்கள் உயிர் பலியானதைக்காட்டவில்லை. அந்த உடல்களையும் காட்டவில்லை.

இந் நிலையில் ஈராக்கியப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடக்கும் போரை அல்-ஜசீரா தான்நேரடியாக ஒளிபரப்பு செய்து வருகிறது. இந்த டிவியை தனியார் நடத்தி வருவதாக கத்தார் அரசு கூறுகிறது.ஆனால், அந்த அரசுக்கு இந்த டிவியில் பெரும் முதலீடு உள்ளது.

இப்போது நடந்து வரும் போரில் அமெரிக்காவை கத்தார் ஆதரிக்கிறது. இந் நாட்டின் தலைநகர் தோஹாவில்தான் முக்கிய அமெரிக்க ராணுவத் தளமே அமைந்துள்ளது. முதலில் சில நாட்கள் அமெரிக்காவுக்கு ஆதரவாகசெய்திகளைத் தந்த அல் ஜசீரா பின்னர் தடம் மாற்றிக் கொண்டுவிட்டது.

இப்போது ஈராக் தரப்பில் உள்ள நியாயங்களை எடுத்துச் சொல்ல ஆரம்பித்துள்ளது. இதனால் அரபு நாடுகளில்சி.என்.என், பி.பி.சி, பாக்ஸ் நியூஸை கண்டுகொள்ள ஆள் இல்லை. இதன் காரணமாக அமெரிக்காகடுப்படைந்துள்ளது.

தங்கள் ஆதரவு நாடான கத்தார் அரசின் தொலைக்காட்சியே தங்களுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டுவருவதாக காலின் பாவல் கூறியுள்ளார். அமெரிக்க ரேடியோவுக்கு அவர் அளித்த பேட்டியில், ஈராக்கியப்படைகளின் சிறிய வெற்றிகளைக் கூட லென்ஸ் வைத்துக் காட்டுகிறது அல் ஜசீரா. அரபு நாட்டு மக்களிடம்பரபரப்பாக பேசப்பட வேண்டும் என்று தான் அந்த டிவி விரும்புகிறது.

ஈராக்கிய மக்களுக்கு நல்வாழ்வு தரும் அமெரிக்க முயற்சிகளை எதிர்மறையாகக் காட்டுகிறது. நாங்கள் வென்றபின்னர் அல்-ஜசீரா என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்கப் போகிறோம் என்றார்.

மேலும் அல்-ஜசீராவின் இணையத் தளத்தை அமெரிக்கா முடக்கும் என்றும் தெரிகிறது.

ஈராக்கிய போர் முறையில் மாற்றம்:

போர் தொடங்கியவுடன் முதல் இரண்டு நாட்கள் தொடர்ந்து சரணடைவதிலேயே குறியாய் இருந்த ஈராக்கியவீரர்கள் இப்போது திடீரென தாக்குதல் நடத்த ஆரம்பித்திருப்பது அமெரிக்காவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

விமானப் படைகளின் தாக்குதலால் ஈராக்கிய ராணுவ தகவல் தொடர்பு முழுமையாக பாதிக்கப்பட்டது. இதனால்ஈராக்கிய ராணுவப் பிரிவுகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாமல் போனது.

இதனால் ஒரு பகுதியில் ஒரு பிரிவு போரிட்டு வந்த நிலையில் இன்னொரு பிரிவு சரணடைந்து வந்தது. ஆனால்,இப்போது ஈராக்கியப் படைகளிடையே நல்ல ஒருங்கிணைப்பு ஏற்பட்டுள்ளதாக பென்டகன் கருதுகிறது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X