புலிகளை ஆதரித்து பேசிய வழக்கு: நெடுமாறன் மனு தள்ளுபடி
சென்னை:
தமிழர் தேசிய இயக்கத் தலைவரான பழ. நெடுமாறன் கடந்த 1992ல் விடுதலைப்புலிகளைஆதரித்துப் பேசியது தொடர்பான வழக்கு செல்லாதது என அறிவிக்கக் கோரி அவர் தாக்கல் செய்தமனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திண்டுக்கல் மாவட்டம் வானம்பட்டி கிராமத்தில் கடந்த 1992ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் புலிகளை ஆதரித்துப் பேசியதாக நெடுமாறன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கொடைக்கானல் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவருகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார் நெடுமாறன். இந்தக் கைது சம்பவத்திற்குப் பின்னர் அவர் மீதுதொடரப்பட்ட பழைய வழக்குகளையும் தமிழக அரசு தோண்டி எடுத்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில் வானம்பட்டியில் புலிகளை ஆதரித்துப் பேசியது தொடர்பான வழக்கை செல்லாததுஎன அறிவிக்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் நெடுமாறன் மனு தாக்கல் செய்தார்.
அன்று தான் பேசிய பேச்சு யாரையும் பாதிக்கவில்லை, எந்தவிதமான வன்முறையையும்தூண்டவில்லை என்றும் அம்மனுவில் நெடுமாறன் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம், இதைத் தள்ளுபடிசெய்தார்.


