ஈராக் பதில் தாக்குதல் எதிரொலி: மேலும் 30,000 அமெரிக்க படைகள் விரைவு
வாஷிங்டன்:
ஈராக் போர் எதிர்பார்த்ததைவிடக் கடுமையாக இருப்பதால் 30,000 குடுதல் வீரர்களை அமெரிக்கா அனுப்பஉள்ளது.
ஈராக்கை 48 மணி நேரத்தில் பிடித்துவிடலாம் என்று தான் முதலில் பென்டகன் கருதியது. இதற்காக 3 லட்சம்துருப்புக்களை அனுப்பியது. இது தவிர பிரிட்டனும் 40,000 வீரர்களை ஈராக்குக்கு அனுப்பியது.
ஆனால், ஈராக் ராணுவம் தீவிரமான எதிர் தாக்குதல் நடத்துவதாலும், பல்வேறு போராளிக் குழுக்களும் தாக்குதல்நடத்த ஆரம்பித்திருப்பதாலும் அமெரிக்கா நினைத்தைவிட போர் கடுமையானதாகிவிட்டது.
இப்போது பாக்தாதைத் தவிர வேறு எந்த நகரத்தையும் பிடிக்கும் அளவுக்கு அமெரிக்கப் படை பலம் இல்லை.இதனால் மேலும் 30,000 துருப்புக்களை ஈராக்குக்கு அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
4வது இன்பான்ட்ரியைச் சேர்ந்த 12,000 வீரர்கள் இன்று டெக்ஸசில் இருந்து விமானங்களில் குவைத்துக்குப்புறப்பட்டனர். இந்தப் படை அதி நவீனமானதாகும். ஆப்ராம்ஸ் டாங்குகள், பிரட்லி கவச வாகனங்ள், டிஜிட்டல்தகவல்தொடர்பு சாதனங்கள், ஹெலிகாப்டர்கள், விமானியில்லாமல் பறக்கும் உளவு விமானங்கள் ஆகியவற்றைக்கொண்டது இப் படை.
பாக்தாதை நோக்கி முன்னேறி வரும் அமெரிக்கப் படைகளுக்கு இந்தப் படை பின்னால் இருந்து பாதுகாப்பு தரும்.இந்தப் படை மேலும் 18,000 வீரர்களும் ஈராக் செல்ல உள்ளனர்.
இதற்கிடையே புளோரிடாவில் ராணுவ தளத்தில் வீரர்களிடையே பேசிய அதிபர் ஜார்ஜ் புஷ், போர் நாம்நினைத்தபடி தான் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் சதாம் ஹூசேனின் பலம் குறைந்து கொண்டே வருகிறது.நாம் பாக்தாதை நெருங்கியவண்ணம் உள்ளோம். விரைவில் போர் முடியும். அங்கு சதாம் ஆட்சி முடிவுக்கு வரும்என்றார்.
அமெரிக்கா- பிரிட்டன் கருத்து வேறுபாடு:
போர் நீண்ட காலம் நீடிக்கும் சூழ்நிலை உருவாகியிருப்பதால் அது குறித்து விவாதிக்க பிரிட்டிஷ் பிரதமர் டோனிபிளேர் வாஷிங்டன் வந்துள்ளார். அதிபர் ஜார்ஜ் புஷ்சுடன் அவர் தீவிர ஆலோசனைகள் நடத்தி வருகிறார்.
ஈராக்கில் சதாம் ஹூசேன் அரசு நீக்கப்பட்டால் அங்கு மாற்று அரசு அமைப்பதில் பிரிட்டனுக்கும்அமெரிக்காவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.
ஈராக்கில் தனது கைப்பாவையை ஆட்சியாளராக நியமிக்க ஜார்ஜ் புஷ் விரும்புகிறார். ஆனால், அங்கு ஐ.நா.தலைமையிலான ஒரு அரசு தான் அமைக்கப்பட வேண்டும் என பிரிட்டன் விரும்புகிறது. இந்த விவகாரம் குறித்துபுஷ்சுடன் பிளேர் விவாதித்து வருகிறார்.
டெக்ஸஸ் நிறுவனத்துக்கு காண்ட்ராக்ட்:
இந் நிலையில் தெற்கு ஈராக்கில் ஈராக்கியப் படைகளால் தீ வைக்கப்பட்ட எண்ணெய்க் கிணறுகளை அணைக்கும்காண்ட்ராக்ட் டெக்ஸஸைச் சேர்ந்த நிறுவத்துக்குத் தரப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் அமெரிக்கத் துணை அதிபர்டிக் செனிக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது.
டெக்ஸஸ் ஜார்ஜ் புஷ்சின் சொந்த மாகாணமாகும். இங்குள்ள பல எண்ணெய் ஆலைகளில் புஷ் குடும்பத்துக்குபங்கு உண்டு. இதனால் ஈராக்கின் பெட்ரோலுக்காகத் தான் அந் நாட்டின் மீது புஷ் தாக்குதல் நடத்தி வருவதாகக்கூறப்படும் நிலையில் டெக்ஸஸ் நிறுவனத்துக்கு காண்ட்ராக்ட் தரப்பட்டுள்ளது அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கும்வகையில் உள்ளது.


