ஈராக் பதிலடியில் நிலை குலைந்தது அமெரிக்கா: ஒரு வாரத்துக்கு போர் நிறுத்தம்
குவைத்:
ஈராக் ராணுவத்தின் பதில் தாக்குதலால் நிலை குலைந்து போய்விட்ட அமெரிக்கா, பாக்தாத் நோக்கி முன்னேறும்தனது படைகளை ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாக்தாதை நோக்கி முன்னேறிச் சென்றுள்ள அமெரிக்க- பிரிட்டிஷ் படைகளை பின்னால் இருந்து ஈராக்கியப்படைகள் தாக்குகின்றன. குறிப்பாக குவைத்தில் இருந்து அமெரிக்க- பிரிட்டிஷ் வீரர்களுக்கு வரும் உணவு, ஆயுதசப்ளை வாகனங்களை ஈராக்கிய வீரர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்தி சிதறடித்து வருகின்றனர்.
இதனால் ஈராக்குக்குள் சோறு, தண்ணீர், ஆயுதங்கள் இல்லாமல் தவிக்கும் நிலைக்கு அமெரிக்க- பிரிட்டிஷ்படைகள் தள்ளப்பட்டுள்ளன. போர் தொடங்கி 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் சில அமெரிக்கப் படைப்பிரிவுகளிடம் கடும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இவர்களுக்கு சப்ளைகளை வழங்க குறைந்த உயரத்தில் பறந்து வரும் ஹெலிகாப்டர்களும் கடும் தாக்குதலுக்குஉள்ளாகின்றன. இதனால் சில அமெரிக்க- பிரிட்டிஷ் படைகளுக்கு போதிய உணவு இல்லை. அவர்கள் ஒருநாளை ஒரு வேளையே சாப்பிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், வழியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் இருந்து நீரை அருந்தவும் அமெரிக்கப் படைகள் அஞ்சுகின்றன.இவற்றில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் உள்ளது.
இந்தப் படையினருக்கு ஈராக்கிய மக்களிடமும் ஆதரவு கிடைக்கவில்லை. ஈராக்கிய ராணுவத்தினருடன் சேர்ந்துகொண்டு அவர்களும் இந்தப் படைகளை சுற்றி வளைத்துத் தாக்கி வருகின்றனர்.
இதனால் தங்களது சப்ளை ரூட்களை முதலில் காப்பாற்ற வேண்டிய நிலையில் அமெரிக்க ராணுவம் உள்ளது.கிட்டத்தட்ட 250 கி.மீ. நீளம் கொண்ட இந்த சப்ளை ரூட்களை பாதுகாக்க மேலும் பல ஆயிரம் வீரர்கள் தேவை.இதற்காக மேலும் சுமார் 1.2 லட்சம் வீரர்களை ஈராக்குக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
முதலில் 30,000 கூடுதல் வீரர்கள் போதும் என அமெரிக்கா நம்பியது. ஆனால், ஈராக்கிய ராணுவத்தினரின்தாக்குல் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு இருப்பதால் 1.2 லட்சம் வீரர்களையும் கூடுதல் டாங்குகள்,ஹெலிகாப்டர்கள், ஆயுதங்களைக் குவித்துவிட்டு பின்னர் மேற்கொண்டு ஈராக்குக்குள் செல்ல அமெரிக்காதிட்டமிட்டுள்ளது.
இதற்காக போரை 4 முதல் 7 நாட்கள் வரை நிறுத்தி வைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.அதே நேரத்தில் தங்கள் படைகள் மீது தாக்குதல் நடத்தும் ஈராக்கியப் படைகள் மீது பதில் தாக்குதல் நடத்த முடிவுசெய்துள்ளது.
ஆனால், இந்த போர் நிறுத்தத் தகவலை பிரிட்டிஷ் படைகளின் தலைவரான கமாண்டர் அல் லாக்வுட் மறுத்தார்.அவர் கூறுகையில், இந்தச் செய்தியை தவறானது. இது குறித்து பென்டகனுடன் பேசிவிட்டேன். இச் செய்தியைபென்டகன் மறுத்துள்ளது என்றார்.
இருப்பினும் அமெரிக்காவிடம் அப்படிப்பட்ட யோசனை இருப்பதை குவைத்தில் உள்ள அமெரிக்க அதிகாரிகள்மறுக்கவில்லை, குவைத்தில் இருந்து எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் அமெரிக்க- பிரிட்டிஷ் படைகள் ஈராக்குக்குள்நுழைந்தன. அவர்களை ஈராக்கிய ராணுவம் தாக்கவே இல்லை.
இதனால் போரை ஒரு வாரத்தில் முடித்துவிட்டு ஊர் திரும்பலாம் என அமெரிக்க நினைத்தது. ஆனால்,அமெரிக்கப் படைகளை தனது நாட்டுக்குள் சுமார் 230 கி.மீ. தூரம் நுழைய விட்ட பின்னர் சுற்றி வளைத்துத் தாக்கஆரம்பித்துள்ளது ஈராக். இதை அமெரிக்கா எதிர்பார்க்கவே இல்லை.
தனது வீரர்களின் உயிரைக் காப்பாற்ற இப்போது அமெரிக்காவே தாற்காலிக போர் நிறுத்தத்தை அறிவிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது ஈராக்கிய ராணுவ தந்திரத்துக்கு கிடைத்த வெற்றியாகவேகருதப்படுகிறது.
திணறும் அமெரிக்கா:
முன்னதாக இன்று காலை ஈராக்கிய தலைநகர் பாக்தாத் மீது மிக பயங்கர குண்டுவீச்சை அமெரிக்க போர்விமானங்கள் நடத்தின. தரைப் படைத் தாக்குதல் நிறுத்தப்பட்டாலும் அமெரிக்க வான்வெளித் தாக்குதல் தொடரும்என்று தெரிகிறது.
பாக்தாதிலும் பாஸ்ராவிலும் நடந்த பயங்கர குண்டுவீச்சில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர். மேலும்பாஸ்ராவில் ஈராக்கின் ரிபப்ளிகன் படைகளைச் சேர்ந்த 200 பேர் இருந்த ஒரு கட்டத்தின் மீது இன்று ஏவுகணைத்தாக்குதலை அமெரிக்கா நடத்தியது. அதில் எத்தனை பேர் இறந்தார்கள் என்று தெரியவில்லை.
நசிரியா நகரில் கடந்த 5 நாட்களாக பயங்கர சண்டை நடந்து வருகிறது. அந்த நகருக்குள் நுழைந்த 14 பிரிட்டிஷ்வீரர்களை ஈராக்கியப் படைகள் கொன்று குவித்தன. அதே போல உம் கஸ்ஸர் நகரமும் இன்னும் அமெரிக்கப்படைகளின் கட்டுப்பாட்டில் வரவில்லை.
இந்த நகரை கைப்பற்ற தொடர்ந்து 8 நாட்களாக சண்டை நடந்து வருகிறது. இன்னும் ஈராக்கிய வீரர்களைஅமெரிக்க- பிரிட்டிஷ் படைகளால் அடக்க முடியவில்லை. போர் தொடங்கி 10 நாட்கள் கடந்துவிட்ட நிலையில்குவைத் எல்லையில் உள்ள அல்-போ துறைமுக நகரை மட்டுமே அமெரிக்கப் படைகளால் பிடிக்க முடிந்துள்ளது.ஆனால், இந்த அல்போ நகரில் இருந்து இன்று குவைத் மீது ஏவுகணையைச் செலுத்திக் காட்டியுள்ளது ஈராக்.
இதனால், பாக்தாத் நகரை சிதறடித்துவிட்டால் ஈராக்கிய ராணுவத்தின் முதுகெலும்பை முறித்துவிட முடியும் எனஅமெரிக்கா கருதுகிறது. இதனால் பாக்தாத் மீது தொடர்ந்து விமானத் தாக்குதல் நடந்து வருகிறது.
இன்று காலை முதல் அந்த நகரில் 10க்கும் மேற்பட்ட குண்டுகள் தாக்கியுள்ளன. தொடர்ந்து தாக்குதல் நடந்துவருகிறது. அதிகாலையில் மக்கள் வசிக்கும் புற நகர்ப் பகுதியில் ஒரு குண்டு தாக்கியது. இதன் பின்னர் ஈராக்கின்மத்தியப் பகுதியில் உள்ள ஈராக்கிய தகவல் தொடர்புத்துறை அலுவலகத்தை ஒரு குண்டு தகர்த்தது.
இதற்கிடையே பாக்தாத் மார்க்கெட் மீது நடந்த தாக்குதலில் மொத்தம் 53 பொது மக்கள் உயிரிழந்துளளதாக ஈராக்குற்றம் சாட்டியுள்ளது. இந்தத் தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என அமெரிக்கா கூறி வருகிறது.
53 அப்பாவி மக்களைப் பலிகொண்ட இந்தத் தாக்குதல் அமெரிக்காவுக்கு ஈராக்கிய மக்களிடையே கடும்எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


