அடுத்து எங்கள் கவனம் இந்தியா- பாக் மீது தான்: அமெரிக்கா
வாஷிங்டன்:
ஈராக் விவகாரம் முடிந்த பின்னர் இந்தியா- பாகிஸ்தான் பிரச்சனையை எடுத்துக் கொள்ளப் போவதாக அமெரிக்காகூறியுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் அளித்துள்ள பேட்டியில்,
ஈராக் பிரச்சனைக்குப் பின் தெற்காசியா பக்கம் அமெரிக்கா கவனம் திருப்பும். குறிப்பாக இந்திய- பாகிஸ்தான்இடையிலான பிரச்சனையில் கவனம் செலுத்தப்படும். இரு நாடுகளுக்கும் இடையே அணு ஆயுதப் போர்மூண்டுவிடாமல் நிரந்தரமாகத் தடுக்கும் வகையில் எங்களது நடவடிக்கை இருக்கும்.
இரு நாடுகளும் மீண்டும் போர் முனைக்கு வந்துவிடாமல் தவிர்ப்போம். இரு நாடுகளும் கடந்த ஆண்டு போரில்இறங்கும் என அனைவரும் கூறிக் கொண்டிருந்தபோது அதை அமெரிக்கா தவிர்த்துக் காட்டியது. இதற்காகஏகப்பட்ட வேலைகளை செய்ய வேண்டி இருந்தது.
இந்தியா- பாகிஸ்தான் விவகாரத்தில் தான் அதிக கவனம் செலுத்த அதிபர் புஷ் திட்டமிட்டிருந்தார். ஆனால், ஈராக்விஷயம் காரணமாக கடந்த 6 மாதங்களாய் அதைச் செய்ய முடியவில்லை. இந்தப் போர் முடிந்தவுடன் மீண்டும்இந்தியா- பாகிஸ்தான் விவகாரத்தில் இறங்குவோம்.


