நேரடி மோதலில் ஈடுபடுவோம்: வி.எச்.பி மிரட்டல்
டெல்லி:
அயோத்தியில் சர்ச்சைக்குட்பட்ட இடத்துக்கு அருகே பூஜை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி தரமறுத்துவிட்டதையடுத்து நேரடியாக மோதலில் ஈடுபடப் போவதாக விஸ்வ இந்து பரிஷத் மிரட்டியுள்ளது.
இந்தத் தீர்ப்பே தவறானது என ஆர்.எஸ்.எஸ். கூறியுள்ளது.
வி.எச்.பி. துணைத் தலைவர் ஆச்சார்யா கிரிராஜ் கிசோர் நிருபர்களிடம் கூறுகையில்,
நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் மதசார்பற்றவர்களுடன் நேரடியாக மோத வேண்டிய நிலை எங்களுக்குஏற்பட்டுள்ளது. அயோத்திக்கா அடுத்த கட்டப் போராட்டம் நடத்துவது குறித்து இந்த வார இறுதியில்முடிவெடுக்கப்படும்.
நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றி அயோத்தியில் கோவில் கட்டுவதற்கு நிலத்தைப் பெற வேண்டும்.அல்காபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை உச்ச நீதிமன்றம் எங்களை காத்திருக்கச் சொல்கிறது. அதுவரைநாங்கள் காத்திருக்க மாட்டோம். இனியும் பொறுமை காக்க இந்துக்களால் முடியாது.
இப்போது அயோத்தியில் கோவில் கட்ட சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தி வருகிறோம். இந்தப் போராட்டம்நாளை முடிவடைகிறது. இதன் பின்னர் அடுத்த கட்டப் போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
தீர்ப்பு தவறானது: ஆர்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளர் ராம் மகாதேவ் நிருபர்களிடம் கூறுகையில்,
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மூலம் பிரச்சனை மேலும் தீவிரமாகும். நீதிமன்றத் தீர்ப்பை மதித்தாலும் இந்தத்தீர்ப்பு எங்களுக்கு திருப்தி தரவில்லை. சர்ச்சைக்குரிய இடம், அதைச் சுற்றியுள்ள இடம் ஆகியவற்றை நீதிமன்றம்தனித்தனியே பார்த்திருக்க வேண்டும். அப்படியில்லாமல் வேறு மாதிரியாக தீர்ப்புத் தந்துள்ளது உச்சநீதிமன்றம்.
இந்தத் தீர்ப்பால் பிரச்சனைக்குத் தீர்வு காணும் திட்டங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கட்சிகளின்ஆதரவைத் திரட்டி சட்டம் நிறைவேற்றி நிலத்தை கோவில் கட்டத் தர வேண்டும்.
நீதிமன்றம் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்காததால் நாங்கள் மக்கள் நீதிமன்றத்தை அணுகுவோம் என்றார்.


