For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உண்மைகளை மறைக்கும் அமெரிக்க தொலைக்காட்சிகள்

By Staff
Google Oneindia Tamil News

நஜாப்:

ஈராக்கின் தென் மத்தியில் உள்ள நஜாப் நகரை சுற்றி வளைத்துவிட்டதாக அமெரிக்கப் படைகள் கூறியுள்ளன.

இங்கு நடந்த பயங்கர சண்டையில் 100 ஈராககிய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 50 பேர் பிடிபட்டதாகவும்அமெரிக்கா கூறியுள்ளது. இந்த நகரில் ஒவ்வொரு வீடாக சோதனை நடத்தப்பட உள்ளதாகவும் இதற்காகஅமெரிக்காவின் 101வது ஏர்பார்ன் டிவிசன் படை நகரை சுற்றி வளைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், நஜாப் நகரில் கடும் மோதல் நடந்து வருவதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த நகரைக்கட்டுப்பாட்டில் கொண்டு வராத வரை பாக்தாத் நோக்கி முன்னேறும் படைகளுக்கு உணவு, எரிபொருள்சப்ளைகளைத் தொடர்வது கடினம் என்று தெரிகிறது.

இந்த நகரில் தான் சனிக்கிழமை 5 அமெரிக்க வீரர்களை ஒரு ஈராக்கிய கமாண்டோ வீரர் தற்கொலைத் தாக்குதல்நடத்திக் கொன்றார். இதையடுத்து அலி ஜாபர் அல் நோயாமனி என்ற அந்த வீரருக்கு நாட்டின் உயரிய 2 ராணுவவிருதுகளை ஈராக்கிய அதிபர் சதாம் ஹூசேன் அறிவித்துள்ளார். அவரது குடும்பத்துக்கு 34,000 அமெரிக்கடாலர்களை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே ஈராக்கியர்களுடன் சேர்ந்து போராட பல்வேறு அரபு நாடுகளில் இருந்தும் தன்னார்வ வீரர்கள்ஆயிரக்கணக்கில் ஈராக்குக்குள் புகுந்து வருகின்றனர். குறிப்பாக பாலஸ்தீன், ஜோர்டன், எகிப்து நாடுகளில் இருந்துபெரும் எண்ணிக்கையிலான தற்கொலைத் தாக்குதல் வீரர்கள் வந்த வண்ணம் இருப்பதாக ஈராக்கிய தகவல்துறைஅமைச்சர் சகாப் தெரிவித்தார்.

ஈராக்கிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ஸத் இப்ராகிம் கூறுகையில், எங்கள் தலைநகரை நோக்கி அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள் முன்னேறி வருவத்ை தடுத்துவிட்டோம். இப்போது பாலைவனத்தில் ஆங்காங்கேஅவர்களைத் தாக்கி வருகிறோம். இதையும் மீறி பாக்தாதுக்குள் வந்தால் அவர்களை சுற்றி வளைத்து தற்கொலைத்தாக்குதலை நடத்துவோம்.

இதையடுத்து எந்த வழியாக வந்தார்களோ அந்த வழியிலேயே அமெரிக்க- பிரிட்டிஷ் படைகள் திரும்பிஓடுவார்கள். வழியில் அவர்களுக்கு தாகத்துக்கு தண்ணீர் கூட கிடைக்காது. பாலைவனத்திலேயே கிடந்துசாவார்கள் என்றார்.

ஈராக்கியப் படைகள் அடங்காமல் பதில் தாக்குதல் நடத்தி வருவதால் அதிபர் சதாம் ஹூசேன் மீதான மரியாதைஅரபு நாடுகளின் மக்களிடையே பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக அரேபிய டிவி சானல்கள் அனைத்தும்சதாமையும் ஈராக்கையும் புகழ்ந்து வருகின்றன.

மேலும் அமெரிக்கத் தாக்குதலில் பெண்களும் குழந்தைகளும் முதியோரும் பலியாகிக் கிடப்பதையும்,காயமடைந்து கிடப்பதையும் இந்த அரேபிய சானல்கள் காட்டி வருகின்றன. இதனால் அமெரிக்கா மீதானவெறுப்பு பல மடங்கு அதிகரித்து வருகிறது.

அதே நேரத்தில் நூற்றுக்கணக்கில் ஈராக்கிய அப்பாவி மக்கள் பலியாவதையும் காயமடைந்துள்ளதையும்சி.என்.என். பாக்ஸ் நியூஸ் ஆகியவை மறைத்து வருகின்றன. பி.பி.சி. மட்டுமே கொஞ்சம் நியாயமாக நடந்துவருகிறது. ஆனால், பி.பி.சி. ஈராக்குக்கு ஆதரவாக செயல்படுவதாக பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் குற்றம்சாட்டியுள்ளார். பிரிட்டிஷ் அரசு நிதியுதவியுடன் தான் பி.பி.சி. நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இன்று பாக்தாதைத் தாக்க பி-1, பி-2, பி-52 ஆகிய பயங்கர குண்டு வீச்சு விமானங்களைஅமெரிக்கா பயன்படுத்தியது. ஒரே நேரத்தில் இந்த விமானங்கள் பாக்தாத் மீது குண்டு மழைை பொழிந்தன.அமெரிக்க வரலாற்றிலேயே இந்த 3 ரக விமானங்களும் ஒரே இலக்கை அடுத்தடுத்து தாக்கியது இதுவேமுதன்முறையாகும்.

மேலும் ஈராக்கிய ரேடியோ டவர்களையும் இந்த விமானங்கள் தாக்கின.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X