இந்திய தூதரகத்துடன் தொடர்பு துண்டிப்பு
துபாய்:
ஈராக்கில் உள்ள இந்தியத் தூதரகத்துடனான அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுவிட்டன.
தொலைத் தொடர்புக் கட்டமைப்புகளை அமெரிக்க விமானங்களும் ஏவுகணைகளும் அழித்துவிட்டதால்ஈராக்குடனான வெளிநாட்டு செய்தித் தொடர்பு முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாக்தாதில் உள்ள இந்தியத் தூதரகத்துடனான செய்தித் தொடர்பும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகஈராக்குக்கான இந்தியத் தூதர் பி.பி.தியாகி கூறினார்.
போர் தொடங்கியுடன் தியாகி தலைமையிலான அனைத்து இந்திய தூதரக ஊழியர்களும் ஈராக்கை விட்டுவெளியேறி துபாய் வந்துவிட்டனர். அங்கிருந்தவண்ணம் பாக்தாதில் உள்ள தூதரகத்துடன் தொடர்புவைத்திருந்தனர்.
இந்தியத் தூதரகத்தில் பணியாற்றி வந்த சில ஈராக்கியர்கள் தொடர்ந்து தூதரகததைப் பராமரித்து வந்தனர். ஆனால்,இப்போது தொலைத் தொடர்பு சிதைக்கப்பட்டுவிட்டதால் இந்தியத் தூதரகத்துடனான தகவல் தொடர்புதுண்டிக்கப்பட்டுவிட்டது.
இந்தியத் தூதரகம் அதிபர் சதாம் ஹூசேனின் மாளிகைக்கு அருகில் தான் உள்ளது. ஆனால், குண்டுவீச்சில்மாளிகை சிதைந்துவிட்டது. இந்தியத் தூதரகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஈராக்கில் பல்வேறு சமூக நல அமைப்புகளில் பணியாற்றி வந்த 3 கன்னியஸ்திரிகள் உள்பட 14 இந்தியர்களின்நிலை என்னவானது என்றும் தெரியவில்லை என்றார் தியாகி.
அதே போல இந்தியாவில் இருந்து 13,000 டன் கோதுமையுடன் ஈராக்குக்கு அனுப்பப்பட்ட கப்பல் உம்- கஸ்ஸர்துறைமுகத்தில் அனுமதிக்கப்படவில்லை. இப்போது ஐ.நா. அனுமதியுடன் இக் கப்பல் வேறொரு ஈராக்கியதுறைமுகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.


