மத்திய அரசின் போக்கு எங்களுக்கு திருப்தி இல்லை: மதிமுக
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு தொடர்பாக திருத்தப்பட்ட புதிய பதில் மனுதாக்கல் செய்யப்பட்டாலும்கூட மத்திய அரசின் போக்கில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்றுமதிமுக கூறியுள்ளது.
நேற்று காலை வேலூர் மத்திய சிறையில் வைகோவைச் சந்தித்த மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசனும், மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரனும் மாலையில் கருணாநிதியைச் சந்தித்தனர்.
கருணாநிதியைச் சந்தித்த பின்னர் நிருபர்களிடம் கணேசன் கூறுகையில்,
வைகோ மனதளவில் காயப்பட்டு விட்டார். அவரைக் காயப்படுத்தி விட்டனர். அதை சரி செய்யவேதிருத்தப்பட்ட பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இருப்பினும் அதில் எங்களுக்குத் திருப்தி இல்லை. மகிழ்ச்சி இல்லை. கருணாநிதியின் தலையீடுகாரணமாக நிலைமை ஓரளவு சரியாகியுள்ளது.
எங்களைப் பொறுத்தவரை இப்போதைக்கு இரண்டு முக்கியக் கொள்கைகளை மட்டும்வைத்துள்ளோம். தமிழக அரசுக்கு எதிராக மக்கள் ஆதரவைத் திரட்டுவது, வைகோவை பத்திரமாகசிறையிலிருந்து மீட்பது ஆகியவைதான் அந்த இரண்டு கொள்கைகள் என்றார் கணேசன்.
டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு மதிமுக ஏன்அழைக்கப்படவில்லை என்று செஞ்சி ராமச்சந்திரனிடம் கேட்டபோது அது தேசிய ஜனநாயககூட்டணி கூட்டமல்ல என்றார்.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கருணாநிதி கூறுகையில்,
இந்த விவகாரத்தில் மதிமுகவினர் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் இன்னும்திருப்தி இல்லாமல்தான் உள்ளனர். அவர்களுக்கு பாதிப்பு இருக்கத்தான் செய்யும்.
மத்திய அரசின் முதல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதில் தவறு நேர்ந்து விட்டது. அதற்குஅட்டர்னி ஜெனரலின் ஜூனியர் வக்கீல்கள்தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது.
வைகோவை விடுவிக்க அரசியல் ரீதியாகவும் சட்டப்பூர்வமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்என்றார் கருணாநிதி.


