ஜீப் மீது அமெரிக்க ஹெலிகாப்டர் தாக்குதல்: 15 அப்பாவிகள் பலி
ஹில்லா:
பொது மக்கள் சென்ற ஜீப் மீது அமெரிக்க ஹெலிகாப்டர் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் 15 அப்பாவிகள்உயிரிழந்தனர்.
ஈராக்கின் தென் பகுதியில் உள்ள ஹில்லா என்ற இடத்தில் இச் சம்பவம் நடந்தது. நசிரியா நகரில் அமெரிக்க-ஈராக் படைகளுக்கு இடையே நடந்து வரும் மோதலிலில் இருந்து தப்ப 16 பேர் கொண்ட குடும்பத்தினர் ஜீப்பில்தப்பிச் சென்றனர்.
ஹில்லா என்ற இடத்தில் அந்த ஜீப்பை அமெரிக்க ஹெலிகாப்டர் குண்டு வீசித் தாக்கியது. இதில் அந்த ஜீப்வெடித்துச் சிதறியது. அதில் இருந்த குழந்தைகள், பெண்கள், முதியோர் உள்பட 15 பேர் அந்த இடத்திலேயேபலியாயினர். ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார்.
உயிர் தப்பியவரின் பெயர் ரஜாக் அல்- காசிமி அல் கவாஜ். தனது மனைவி, 6 குழந்தைகள், தந்தை, தாயார், 3சகோதரர்கள், அவர்களது 3 மனைவிகளை அமெரிக்க ஹெலிகாப்டர் அழித்துவிட்டதாகக் கூறி அவர் அழுதுபுரண்டார். தனது முகத்தில் மண்ணை வாரி வீசிக் கொண்டு அழுததாக ஏ.எப்.பி. செய்தி நிறுவன நிருபர்கூறியுள்ளார்.
ஹில்லா நகர மருத்துவமனையின் மருத்துவர் கூறுகையில், அமெரிக்க விமான குண்டுவீச்சில் 33 பேர்பலியாகியுள்ளதாகவும் 310 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையே இந்த நகரில் உள்ள முக்கிய பாலத்தை அமெரிக்கப் படைகள் கைப்பற்றின. பாக்தாதை நோக்கிச்செல்லும் சப்ளை வாகனங்கள் அந்த பாலத்தைக் கடந்து தான் சென்றாக வேண்டும்.


