For Daily Alerts
Just In
ஈரோடு அருகே தடம்புரண்ட மற்றொரு சரக்கு ரயில்
ஈரோடு:
ஈரோடு அருகே இன்று அதிகாலை சரக்கு ரயில் தடம் புரண்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் 4 மணிநேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மற்றும் தர்மபுரி அருகே உள்ள ரயில் பாதைகளில் கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து சரக்குரயில்கள் தடம் புரண்டுள்ளன.
இந்நிலையில் ஆந்திராவிலிருந்து உரம் ஏற்றிக் கொண்டு வந்த ஒரு சரக்கு ரயில் ஈரோட்டை அடுத்தபாத்தூர் அருகே தடம் புரண்டது.
ரயில் சக்கரத்தின் அச்சு முறிந்ததால் அந்த ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகிதடம் புரண்டன.
சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் ரயில்வே உயர் அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்துதண்டவாளத்தைச் சரி செய்யும் பணிகளை மேற்கொண்டனர்.
இச்சம்பவத்தால் பெங்களூர்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரயில்கள் 4 மணி நேரம்தாமதாமாகச் சென்றன.


