For Daily Alerts
Just In
சிறுத்தை தாக்கி புது மணப்பெண் பரிதாப சாவு
கோவை:
கோவை மாவட்டம் வால்பாறை அருகே சிறுத்தை தாக்கி சமீபத்தில் திருமணமான பெண் இறந்தார்.
இந்தப் பகுதியில் உள்ள பாலாஜி எஸ்டேடில் வேலை வேலை பார்ப்பவர் பழனிச்சாமி. இவரது மனைவி தேவகி.இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 3 மாதங்கள்தான் ஆகிறது.
நேற்றிரவு தேவகி எஸ்டேடின் வெளியே நடந்து சென்றபோது அங்கு மறைந்திருந்த சிறுத்தை அவரைத் தாக்கிகடித்துக் குதறியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
நீண்ட நேரமாகியும் தேவகி வீட்டுக்கு வராத காரணத்தால் பழனிச்சாமி அவரைத் தேடிப் போனார். அப்போதுதான்சிறுத்தை கடித்து தேவகி இறந்து கிடந்தது தெரியவந்தது.


