ராணி மேரி கல்லூரியை இடிக்க உயர் நீதிமன்றம் தடை
சென்னை:
ராணி மேரி கல்லூரியில் உள்ள எந்தக் கட்டடத்தையும் இடிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக தங்கள் கல்லூரியை இடிக்கக் கூடாது என்று கடந்தநான்கு நாட்களாக ராணி மேரி கல்லூரி மாணவிகளும் ஆசிரியைகளும் போர்க் கொடி எழுப்பிவருகின்றனர்.
கல்லூரி காலவரையின்றி மூடப்படுவதாக உத்தரவிடப்பட்டபோதிலும் அவர்கள் இரவு பகலாகஉள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ராணி மேரி கல்லூரி இடிக்கப்படுவதை எதிர்த்து தமிழ்நாடு அரசுக் கல்லூரிஆசிரியர்கள் கழகம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்செய்யப்பட்டது. அம்மனுவில்,
ராணி மேரி கல்லூரியை இடிப்பது பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசியல் சட்டம்15(4)-ஆம் பிரிவுக்கு எதிரானது.
இந்தக் கல்லூரியின் சொத்து சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமானது. அதை இடிக்கவோ,மாற்றி அமைக்கவோ தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. மேலும் பாரம்பரிய சின்னத்தைஅழிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.
தவிர, கல்லூரியை இடிப்பது தொடர்பாக ராணி மேரி கல்லூரியின் ஆசிரியைகளையோ,மாணவிகளையோ அல்லது பல்கலைக்கழகத்தையோ கலந்து ஆலோசிக்காமலேயே தமிழக அரசுஆணை பிறப்பித்துள்ளது. இது சட்ட விரோதமானது என்று அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதி கே. கோவிந்தராஜன் வீட்டில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.இம்மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி தன் உத்தரவில்,
வரும் 9ம் தேதி வரை ராணி மேரி கல்லூரி வளாகத்தில் உள்ள எந்தக் கட்டடத்தையும் இடிக்கக்கூடாது. அவற்றுக்கு சிறிதளவும் சேதம் விளைவிக்கக் கூடாது. கல்லூரி விடுதியில் தங்கியுள்ளமாணவிகளை வெளியேற்றும் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது.
மேலும் இந்த மனு மீது பதிலளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளர், சென்னைப்பல்கலைக்கழகம், கல்வித் துறை, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) மற்றும்இந்தியத் தொல்பொருள் துறை ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறேன்.
இம்மனு மீதான அடுத்தகட்ட விசாரணை உயர் நீதிமன்றத்தின் முதல் டிவிஷன் பெஞ்ச்சுக்குஅனுப்பவும் உத்தவிடுகிறேன் என்று நீதிபதி கோவிந்தராஜன் தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


