கல்லூரிகளை இடிப்பது வரலாற்றிலேயே இல்லாதது: ராமதாஸ்
சென்னை:
கல்லூரிகளை இடிக்கும் பழக்கம் தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லை என்று பாட்டாளிமக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழக வரலாற்றில் இதுவரை கல்லூரிகளை இடித்து அங்கு வேறு கட்டடங்கள் கட்டியதாக வரலாறேஇல்லை. ஏன், உலக அளவிலும் கூட இது போன்ற சம்பவங்கள் நடந்ததாகத் தெரியவில்லை.
எனவே ராணி மேரி கல்லூரியை உடனடியாகத் திறக்க வேண்டும். அங்குள்ள கட்டடங்களைஇடிக்கக் கூடாது.
பொது நலனிற்காக இடங்களை கையகப்படுத்துவதை அரசு செய்யலாம். தவறில்லை. ஆனால்அதற்காக கல்லூரி போன்ற கல்வி நிலையங்களை இடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றுகோரியுள்ளார் ராமதாஸ்.
மாணவிகளுக்கு இல. கணேசன் அறிவுரை:
இதற்கிடையே போராட்டத்தைக் கைவிட்டு விட்டு ராணி மேரி கல்லூரி மாணவிகள் படிப்பில்கவனம் செலுத்த வேண்டும் என்று அகில இந்திய பா.ஜ.க. செயலாளர் இல. கணேசன் அறிவுரைகூறியுள்ளார்.
ராணி மேரி கல்லூரி இடிப்பு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் மாணவிகளுக்கு ஆதரவாககருத்து தெரிவித்துள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசின் முடிவைக் கண்டித்துள்ளன.
இந்நிலையில் கல்வி அமைச்சர் செம்மலை, மாணவிகள் படிப்பில்தான் கவனம் செலுத்த வேண்டும்என்று கண்டித்துள்ளார். அதேபோல தற்போது பா.ஜ.க.வும் மாணவிகளை கண்டித்துள்ளது.
இல. கணேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராணி மேரி கல்லூரியை இடிப்பதற்கு முன்புமாணவிகளுக்கு மாற்று ஏற்பாட்டை அரசு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மாணவிகளுக்குப்பிரச்சினை இல்லை.
மாணவிகளும் படிப்பில்தான் கவனம் செலுத்த வேண்டும். போராட்டத்தில் ஈடுபடுவது நல்லதல்ல.
திமுகவினர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு எங்களை அழைப்பதே இல்லை. எங்களைப் பொறுத்தவரைதமிழகத்தில் எந்தக் கூட்டணியிலும் பா.ஜ.க. இல்லை என்றார் கணேசன்.


