For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீரப்பனுக்கு கைமாறிய பணம்: கருணாநிதியை கைது செய்ய ஜெ. திட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு கோடிக்கணக்கில் பணம் கைமாறியது தொடர்பாக கருணாநிதியிடம் விரைவில் விசாரணை நடக்க உள்ளது.

கடந்த திமுக ஆட்சியின்போது கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்க கோடிக்கணக்கில் வீரப்பனுக்குப் பணம் தரப்பட்டதாக கர்நாடக முன்னாள்டி.ஜி.பி. தினகர் கூறியுள்ளார். இது குறித்து புத்தகமும் வெளியிட்டுள்ளார். அதில், அப்போதைய முதல்வர் கருணாநிதி மூலமாகவே இந்தப்பணம் வீரப்பனுக்குப் போய்ச் சேர்ந்ததாகவும் பல்வேறு இடங்களில் வசூல் செய்யப்பட்ட பணம் கருணாநிதியின் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து வீரப்பனுக்கு அனுப்பப்பட்டதாகவும் தினகர் கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டை ஜெயலலிதாவும் பலஆண்டுகளாகக் கூறி வந்தார்.

இப்போது தினகரின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த லஞ்ச- ஊழல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார். விரைவில் இந்த விசாரணை தொடங்கும் என்று தெரிகிறது. இதை வைத்து கருணாநிதி மீண்டும் கைது செய்யப்படவும்வாய்ப்புள்ளது.

இன்று சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீது பேசிய ஜெயலலிதா கூறுகையில்,

கடந்த திமுக ஆட்சியில் கருணாநிதி மூலமாகவே வீரப்பனுக்குப் பல கோடிகள் போய்ச் சேர்ந்துள்ளன. இதில் கருணாநிதியும் பெரும்கமிஷன் அடித்துள்ளார். வீரப்பனின் கணக்கில் கருணாநிதியும் பணம் சுருட்டியுள்ளார். இது குறித்து கர்நாடக முன்னாள் டி.ஜி.பி.விவரங்களை புட்டுப் புட்டு வைத்துள்ளார்.

இதனால் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் இது குறித்து விசாரணை நடத்த உள்ளனர். அப்போது உத்தம வேடம் போடும் சிலரின்உண்மையான முகம் அம்பலமாகிவிடும். வீரப்பனைப் பிடிப்பதை விட்டுவிட்டு அவனுக்கு உதவும் போக்கில் கருணாநிதி செயல்பட்டார்.

அவனுக்குப் பணம் வாங்கித் தந்ததோடு தானும் கமிஷன் அடித்துக் கொண்டார். போலீஸ் விசாரணையில் இது குறித்த முழு விவரமும்வெளிவரும்.

நாகப்பா கடத்தப்பட்டது கர்நாடகத்தில் வைத்து. ஆனால், ராஜ்குமார் தமிழக எல்லைக்குள் வைத்துத் தான் கடத்தப்பட்டார். அப்போது திமுகதான் ஆட்சியில் இருந்தது.

எனது அரசின் முயற்சியால் அதிரடிப்படை வீரப்பனை விரட்டி வருகிறது. அவன் இப்போது கர்நாடகக் காட்டுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறான். தமிழக காட்டுப் பகுதியில் நுழையக் கூட முடியாத நிலையை உருவாக்கியுள்ளோம். விரைவில் அவன் பிடிபடுவான்.அவனைப் பிடிப்பது தமிழக அரசின் முக்கிய லட்சியங்களில் ஒன்று.

வீரப்பனைப் பிடிக்க 1999-2000ம் ஆண்டில் ரூ. 22.62 கோடி செலவிடப்பட்டது. 2001-2002ம் ஆணடில் ரூ.9.47 கோடி செலவானது.இப்போது தமிழக அதிரடிப்படையில் 684 போலீசார் உள்ளனர் என்றார் ஜெயலலிதா.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X