For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"சார்ஸ்" நோய்க்கு இதுவரை 154 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

ஐக்கிய நாடுகள்:

"சார்ஸ்" நோய் காரணமாக உலகம் முழுவதும் இதுவரை 154 பேர் பலியாகியுள்ள நிலையில், உலகசுகாதார நிறுவனம் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.

கடந்த சில மாதங்களாக உலகையே அச்சுறுத்தி வரும் "சார்ஸ்" நோய் சீனாவில்தான் தோன்றியதாகத்தெரிய வந்துள்ளது.

மிகவும் எளிதாகப் பரவும் தன்மை வாய்ந்தவை "சார்ஸ்" நோய் வைரஸ் கிருமிகள். விமானம், கப்பல்ஆகியவற்றின் மூலம் வெகு வேகமாகப் பரவி வருகிறது "சார்ஸ்" நோய்.

"சார்ஸ்" நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 154ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்நோயால்பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3,235ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் மட்டும் அதிகஅளவாக 65 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ஹாங்காங்கில் 56 பேர் இந்நோயால்இறந்துள்ளனர்.

இதற்கிடையே "சார்ஸ்" நோய் வைரஸ் கிருமியின் டி.என்.ஏ. வரைபடத்தை கனடாவைச் சேர்ந்த ஒருடாக்டர் வெற்றிகரமாக வடிவமைத்துள்ளார்.

இந்நிலையில் "சார்ஸ்" நோய் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாகஉலக சுகாதார நிறுவனம் அவசரமாகக் கூடவுள்ளது.

ஜெனீவாவில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் "சார்ஸ்"நோய் தொடர்பாக ஆய்வு செய்து வரும் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் மற்றும் டாக்டர்கள்கலந்து கொள்கின்றனர்.

"சார்ஸ்" நோய் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்டுள்ள ஆராய்ச்சிகள் குறித்து அவர்கள் இந்தக்கூட்டத்தில் விவாதிக்க உள்ளனர்.

"சார்ஸ்" நோயின் முழுத் தன்மையும் தெரிந்து விட்டால் ஒரு வாரத்திற்குள் அதைத் தடுக்கும் மருந்துகண்டுபிடிக்கப்பட்டு விடும் என்று சமீபத்தில்தான் உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது என்பதுநினைவுகூறத்தக்கது.

இதற்கிடையே உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் கடந்த சில நாட்களாக சீனாவில் முகாமிட்டு"சார்ஸ்" நோய் குறித்து ஆராய்ந்து வருகிறார்கள். "சார்ஸ்" நோய் தோன்றியதாகக் கருதப்படும்பகுதிகளில் அவர்கள் தீவிர ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள்.

தங்கள் நாட்டில் உள்ள ராணுவ மருத்துமனைகளில் உலக சுகாதார நிறுவன அதிகாரிகள்நுழைவதற்குக் கூட சீனா அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் "சார்ஸ்" நோயின் தோற்றம்குறித்து சீன விஞ்ஞானிகளும் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X