ஜாமீன் கோரி சென்னை நீதிமன்றத்தில் ஸ்டாலின் மனு
சென்னை:
கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக இளைஞரணிச் செயலாளர் ஸ்டாலின் ஜாமீன் கோரிசென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ராணி மேரி கல்லூரியை இடிக்கும் தமிழக அரசின் முடிவைக் கண்டித்து அக்கல்லூரி மாணவிகள்இம்மாதத் துவக்கத்தில் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து அவர்களுக்கு ஆதரவுதெரிவிப்பதற்காக கடந்த 8ம் தேதி அக்கல்லூரி வளாகத்திற்கு ஸ்டாலின் சென்றிருந்தார்.
இந்நிலையில் ராணி மேரி கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றம் சாட்டி அதற்கு மறுநாளேஸ்டாலினைத் தமிழக போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி வேங்கடவரதன் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டஸ்டாலின், பின்னர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சென்னை முதன்மை அமர்வுநீதிமன்றத்தில் ஸ்டாலின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
"ஸ்டாலின் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு ஒரு பொய்யான வழக்காகும். இதற்கு எந்தவிதமானஆதாரமும் இல்லை. ஸ்டாலின் கைது செய்யப்பட்டபோது திமுகவினர்தான் அநியாயமாகத்தாக்கப்பட்டனர். எனவே ஸ்டாலினை விடுதலை செய்ய வேண்டும்" என்று அம்மனுவில்கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஸ்டாலினுடன் கைது செய்யப்பட்ட பொன்முடி உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்களைஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சென்னை-எழும்பூர் 13வது குற்றவியல் நீதிமன்றத்தில்மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


