For Daily Alerts
Just In
பி.இ, எம்.பி.பி.எஸ் நுழைவு தேர்வு: மே 4ல் முடிவு
சென்னை:
பொறியியல், மருத்துவம் மற்றும் விவசாயக் கல்லூரிகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளின்முடிவுகள் வரும் மே 4ம் தேதி வெளியிடப்பட உள்ளன.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தமிழகத்தில் பொறியியல், மருத்துவம் மற்றும் விவசாயக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவ,மாணவிகளுக்கு கடந்த 12 மற்றும் 13ம் தேதிகளில் நுழைவுத் தேர்வுகள் நடைபெற்றன.
இந்த நுழைவுத் தேர்வுகளின் முடிவுகள் மே 4ம் தேதி வெளியிடப்படும். அதன் பின்னர் வரும் ஜூன்23ம் தேதி மாணவ, மாணவிகளுக்கான கவுன்சலிங் தொடங்கும்.
இதற்கான விண்ணப்பங்கள் மே 14ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


