For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாயுடுவைப் பார்த்து திருந்துவார்களா தமிழக கட்சிகள்?

By Staff
Google Oneindia Tamil News

ஹைதராபாத்:

தமிழக அரசியல் கட்சிகள் சுய நலத்துக்காக பா.ஜ.க. தலைமையை மிரட்டி அரசியல் நடத்திக் கொண்டிருக்கும்நிலையில் ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு மக்கள் நலவிஷயங்களுக்காக மத்திய அரசுடன் மோதத் தயாராகி வருகிறார்.

குஜராத் கலவரத்தை தலைமையேற்று நடத்திய நரேந்திர மோடியை மாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்த முதல்தே.ஜ. கூட்டணித் தலைவர் நாயுடு தான். அப்போது தமிழகத்தைச சேர்ந்த திமுக, மதிமுக, பா.ம.க. ஆகியவைஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு மத்திய அரசுக்கு ஜால்ரா போட்டன.

இப்போது சாதாரண தொலைபேசிகளை பயன்படுத்தி வரும் மக்களை வாட்டும் வகையில் மத்திய அரசு சிலநடவடிக்கைகளை எடுத்துள்ளது. செல்போன் நிறுவனங்கள் மற்றும் தனியார் தொலைபேசி நிறுவனங்களிடம் காசுவாங்கிக் கொண்டுள்ள சில மூத்த பா.ஜ.க. தலைவர்கள் தான் இதற்குக் காரணம் என்று பரவலாகப் பேசப்படுகிறது.

இதுவரை பி.எஸ்.என்.எல். தொலைபேசிகளில் மாதம் 60 ப்ரீ கால்கள் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தது. அதை30 ஆக பி.எஸ்.என்.எல். குறைத்துள்ளது. மேலும் ஒரு தொலைபேசி அழைப்பின் டாக் டைம் 3 நிமிடங்களாகஇருந்ததை 2 நிமிடங்களாகக் குறைத்துள்ளது.

இதன்மூலம் நடுத்தர மக்களும், ஏழை மக்களுக்கும் பெரும் தொல்லைக்கு ஆளாகப் போவது நிச்சயம்,பி.எஸ்.என்.எல். தான் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகவும், அது ஏதோ சுதந்திரமான அமைப்பு போலவும் அதில்மத்திய அரசு தலையிட முடியாது என்பது போலவும் பா.ஜ.கவினர் பேசி வருகின்றனர்.

மக்களை கடுமையாக வாட்டப் போகும் இந்தப் பிரச்சனை குறித்து தமிழகத்தின் எந்தக் கட்சியும் இதுவரை வாயைதிறக்கவில்லை. வெட்டி அரசியல் மட்டுமே நடத்திப் பழக்கப்பட்டுவிட்ட இந்தக் கட்சிகள் ஒருவரை ஒருவர் மட்டம்தட்டி அறிக்கைவிடுவது, கைதுகளை சமாளிப்பது, நள்ளிரவில் கைது செய்வது போன்ற கேவலங்களில்ஈடுபட்டிருக்க, இந்த தொலைபேசிக் கட்டண விவகாரத்தை கையில் எடுத்துள்ளார் நாயுடு.

ஆரம்பத்தில் இருந்தே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்து அமைச்சரவையில் இடம் பிடித்துகாண்ட்ராக்டகள், அப்பாயின்மெண்ட்கள், டிரான்ஸ்பர்கள் மூலம் காசு பார்ப்பதைத் தவிர்த்துவிட்டார் நாயுடு. 26எம்.பிக்களைக் கொண்ட அவர் வெளியில் இருந்த வண்ணம் ஆதரவு தந்தாலும் தனது மாநிலத்துக்கு என்னதேவையோ அதை உரிமையுடன் கேட்டு வாங்கி வருகிறார்.

மத்திய அரசின் 12 முக்கிய துறைகளில் செயலாளர்களாக தனது மாநில அதிகாரிகளை உட்கார வைத்துள்ளார்நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு மிக நெருக்கமானவர்களை கவர்னர்களாகவும் ஆக்கியுள்ளார். அதில்ஒருவர் தமிழக கவர்னர் ராம்மோகன் ராவ்.

தமிழக கட்சிகள் ஆட்சியில் இடம் பிடிக்கவும் நல்ல அமைச்சரவையை கேட்டு வாங்குவதிலும் தான் ஆர்வம்காட்டின. இதனால் தமிழக தலைவர்களை டெல்லியில் மதிக்க ஆளில்லாமல் போய்விட்டது. ஆனால், நாயுடு மீதுபிரதமர் வாஜ்பாய் தொடங்கி பா.ஜ.கவினர் மத்தியில் பயம் கலந்த மரியாதை உள்ளது.

தமிழக கட்சிகள் சொந்த வேலைகளில் பிஸியாக இருக்க பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அநியாய தொலைபேசிகட்டணம், கொள்கையை எதிர்த்து நாயுடு குரல் எழுப்பியுள்ளார். இந்த கட்டண உயர்வு, டாக் டைம் குறைப்பு, ப்ரிகால்கள் குறைப்பு ஆகியவை முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக எடுக்கப்பட்டுள்ளதாக நாயுடுகருதுகிறார்.

மேலும் இதனால் மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர மக்கள், ஓய்வூதியத்தில் காலம் தள்ளும் கீழ் நடுத்தர மக்கள்,ஏழைகள் ஆகியோர் மிகவும் பாதிக்கப்படுவர் என நாயுடு கூறியுள்ளார். இது குறித்து விவாதிக்க தனது கட்சியின்பொலிட்பீரோ கூட்டத்தை நேற்று அவர் கூட்டினார்.

அதில், கட்டண உயர்வை எதிர்ப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக உடனே மத்திய அரசை எதிர்த்துஅறிக்கை விட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை, முதலில் நாசூக்காக கோபத்தை வெளிப்படுத்துமாறுஎம்.பிக்களிடம் நாயுடு கூறியுள்ளார். அதை மத்திய அரசு அலட்சியப்படுத்தினல் நேரடியாக மோதுவது என்றும்முடிவு செய்துள்ளது தெலுங்கு தேசம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X