விதவை என்ஜினியருக்கு செக்ஸ் தொல்லை: சேலம் மேயர்-- கமிஷ்னரின் காமலீலைகள்
சேலம்:
சேலம் மாநகராட்சியில் பணிபுரியும் விதவை என்ஜினியரை செக்ஸுக்கு அழைத்ததாக மேயர்சுரேஷ்குமார் மற்றும் கமிஷனர் பால்சாமி ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சேலம் போர்லாண்ட்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணி. 39 வயதா இவர் சேலம் மாநகராட்சியில்இளநிலை என்ஜினியராகப் பணிபுரிந்து வருகிறார். அவருடைய கணவர் என்ஜினியர்வேணுகோபால் 17 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார்.
கலைவாணிக்கு இரண்டு மகள்கள். தந்தையில்லா அவருடைய மூத்த மகளை ஒரு அரசியல்பின்பலம் உள்ள பில்டிங் கான்ட்ராக்டர் கற்பழித்துவிட்டான். இதனால் அவர் மனமுடைந்துதற்கொலை செய்து கொண்டார். மற்றொரு மகள் என்ஜினியரிங் படித்து வருகிறார்.
இந்நிலையில் சேலம் மாநகராட்சி மேயரும் கமிஷனரும் கலைவாணியிடம் தங்கள் சில்மிஷவேலைகளைக் காட்டத் தொடங்கினர். பல முறை கலைவாணியைத் தங்கள் அறைக்கு அழைத்துஅவரைப் பாலியல் பலாத்காரம் செய்ய அவர்கள் முயற்சித்துள்ளனர்.
ஆனால் கலைவாணி அதற்கெல்லாம் இடம் கொடுக்கவில்லை. மேயரும் கமிஷனரும் தன்னைநெருங்கும் போதெல்லாம் அவர்களை திட்டி விட்டு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 10ம் தேதி கலைவாணி திடீரென்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.சுரேஷ்குமாரும் பால்சாமியும் தங்கள் ஆசைக்கு இணங்காத காரணத்தினாலேயே தன்னைப் பழிவாங்கியுள்ளதாக சேலம் மாவட்ட கலெக்டர் ராதாகிருஷ்ணனிடம் அவர் புகார் செய்தார்.
இந்தப் புகாரை உடனடியாக தமிழக முதல்வரின் தனிப் பிரிவில் முறையிடுமாறு கலைவாணிக்குஅறிவுறுத்தினார் ராதாகிருஷ்ணன். இதையடுத்து கலைவாணி தன் கைப்பட முதல்வர்ஜெயலலிதாவுக்கு இது தொடர்பான புகார்க் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ஆனால் இந்தப் புகாரை மேயர் சுரேஷ் குமார் மறுத்துள்ளார். மேலும் கலைவாணிதான் தன்னைத்தகாத உறவுக்கு அழைத்ததாக வாய்கூசாமல் கூறியுள்ளார். அவர் கூறுகையில்,
கலைவாணி ஒழுங்காகவே பணிக்கு வருவதில்லை. வந்தாலும் உருப்படியாக எந்த வேலையையும்செய்வதில்லை. அவருடைய கட்டுப்பாட்டில் உள்ள ஒரு செப்டிக் டேங்க் மூடப்படாமல் இருந்ததால்அதில் ஒரு சிறுவன் தவறி விழுந்து விட்டான்.
இதுபோன்ற ஏராளமான புகார்கள் கலைவாணி மீது கூறப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக நான்அவரை அழைத்து எச்சரித்ததால்தான் இவ்வாறெல்லாம் அவர் என் மீது குற்றம் சாட்டி வருகிறார்.
மேலும் என்னைத் தகாத உறவுக்கும் கலைவாணி அழைத்தார். சாமி சத்தியமாகச் சொல்கிறேன்,இதுதான் உண்மை. எந்தக் கோவிலில் வேண்டுமானாலும் வந்து சூடம் ஏற்றி சத்தியம் செய்கிறேன்.அதற்கெல்லாம் வேறு ஆளைப் பார் என்றும் கூறி கலைவாணியை நான் விரட்டி விட்டேன் என்றார்சுரேஷ் குமார்.
கலைவாணியின் புகார் குறித்து கமிஷ்னர் பால்சாமி கூறுகையில், "சுருக்கமாக நான் ஒரே வரியில்கூறி விடுகிறேன். சாக்கடையில் கற்களை வீசினால் தூய்மையான ஆடையை உடுத்திஇருப்பவருக்குத்தான் நஷ்டம். எனக்குக் கீழ் வேலை பார்ப்பவரிடம் வேலை வாங்குவது என்கடமை. அதைத்தான் நான் செய்து வருகிறேன்" என்று வசனம் பேசினார்.
இதற்கிடையே இது தொடர்பாக தமிழக டி.ஜி.பியிடமும் புகார் கடிதம் கொடுக்கப் போவதாககலைவாணி கூறியுள்ளார்.
"என் கணவர் இறந்தபோதே நானும் உடன்கட்டை ஏறி இருக்க வேண்டும். ஆண் துணைஇல்லாததாலேயே என்னைப் பலரும் பலவிதமாகத் தவறான பார்வை பார்த்து வருகின்றனர். தினமும்என் மகளுடன் செத்துப் பிழைத்து வாழ்க்கை நடத்தி வருகிறேன்" என்று கூறி கதறுகிறார்கலைவாணி.
இதற்கிடையே அதிமுக மேயரான சுரேஷ் குமார் செக்ஸ் விவகாரத்தில் மாட்டியுள்ளதை திமுக, பாமக,காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சி கவுன்சிலர்கள் பிரச்சனையாக்க முடிவு செய்துள்ளன.


