For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியர்களை ஏமாற்றும் அமெரிக்க கார் நிறுவனம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட கார்களை விற்பதாகக் கூறி அமெரிக்காவின் ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம்இந்தியர்களை ஏமாற்றி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட கார்களை ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டதாகக் கூறி இந்தியாவில் ஜெனரல்மோட்டர்ஸ் விற்று வருகிறது.

இந்தியாவில் ஓபல் அஸ்ட்ரா, ஓபல் கோர்ஸா போன்ற வகை கார்களை விற்று வருகிறது ஜெனரல் மோட்டர்ஸ்.இவை ஜெர்மனியில் தயார் செய்யப்படுவதாக விளம்பரம் செய்து வருகிறது.

ஆனால், ஜெனரல் மோட்டர்சின் ஏமாற்று வேலை இப்போது வெளிப்பட்டுவிட்டது. ஜெர்மனியில்தயாரிக்கப்பட்டதாகக் கூறி தன்னை ஜெனரல் மோட்டர்ஸ் ஏமாற்றிவிட்டதாக வினு பகத் என்பவர் தாக்கல் செய்தவழக்கில் அந்த நிறுவனத்துக்கு அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இவர் 1997ம் ஆண்டில் புதிய ஓபல் அஸ்ட்ரா காரை வாங்கினார். ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட கார் என்றவிளம்பரத்தை நம்பி வாங்கினார். ஆனால், வாங்கியதில் இருந்தே பல பிரச்சனைகள் ஏற்பட்டன, குறிப்பாகஎன்ஜினின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. என்ஜினில் புல்லிங் பவரே இல்லை.

இதனால் பலமுறை ஜெனரல் மோட்டர்ஸ் சர்வீஸ் ஸ்டேசன்களுக்கு காரைத் தள்ளிக் கொண்டு செல்ல வேண்டியநிலை ஏற்பட்டது. கிட்டத்தட்ட 12 முறை சர்வீஸ்- ரிப்பேர்கள் செய்தபோதிலும் காரின் செயல்பாடுசரியாகவில்லை.

இதையடுத்து அவர் விசாரித்தபோது தான் கார் ஜெர்மனியில் தயாரிக்கப்படவில்லை என்பதும் அதுஆஸ்திரேலியாவில் உள்ள ஹோல்டன் கம்பெனி என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதும் தெரியவந்தது. தான்ஏமாற்றப்பட்டுவிட்டதை உணர்ந்த வினு பகத் டெல்லி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால்,அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இதையடுத்து தேசிய நுகர்வோர் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். இங்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்புவழங்கப்பட்டது.

வினு பகத்துக்கு எதிராக ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் வாதாடுகையில்,

நாங்கள் காரை ஜெர்மனியில் தயாரிப்பதாக சொல்லவேயில்லை. காரின் ஆவணங்களைப் படித்தாலே அதுபுரியும். ஆஸ்திரேலியாவில் உள்ள ஹோல்டன் கம்பெனி எங்கள் துணை நிறுவனம். எங்களது தொழில்நுட்பத்தைக்கொண்டு ஹோல்டன் நிறுவனம் காரைத் தயாரித்து வருகிறது என்று கூறியது.

ஆனால், அதை நீதிபதிகள் ஏற்கவில்லை. காரின் ஆவணங்களில் எங்கு பார்த்தாலும் ஜெர்மன், ஜெர்மன், ஜெர்மன்என்று தான் கூறப்பட்டுள்ளதே தவிர தொழில்நுட்பத்தைக் கொண்டு ஆஸ்திரேலிய நிறுவனம் காரைத்தயாரிப்பதாக சொல்லப்படவே இல்லை. குறிப்பாக காரின் என்ஜின் ஜெர்மனியில் தயாராகவில்லை என்பதை எந்தஇடத்திலும் ஜெனரல் மோட்டர்ஸ் குறிப்பிடவே இல்லை.

காரை வாங்குவபர்களை ஏமாற்றுவதில் தான் அதிக அக்கறை காட்டியிருக்கிறீர்கள் என நீதிபதிகள் கூறினர்.

இதையடுத்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பில்,

இந்தக் காரை 1997ம் ஆண்டில் ரூ. 7,34,244 கொடுத்து வினு பகத் வாங்கியுள்ளார். இந்தப் பணத்தை 12 சதவீதவட்டியுடன் த் திருப்பித் தர வேண்டும். மேலும் ஏமாற்றப்பட்ட அவருக்கு ரூ. 2 லட்சத்தை ஜெனரல் மோட்டர்ஸ்நிவாரணமாகத் தர வேண்டும். மேலும் இந்த வழக்கை நடத்த வினு செலவிட்ட ரூ. 10,000த்தையும் அவருக்குஜெனரல் மோட்டர்ஸ் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X