லாரி ஸ்டிரைக்: சேலம், நாமக்கல்லில் கலவர அபாயம்
சேலம்:
லாரிகள் ஸ்டிரைக் காரணமாக சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளதொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் பெரும் கலவரம் வெடிக்கும் வாய்ப்புள்ளது என்றுஉளவுத் துறை போலீசார் தமிழக அரசை எச்சரித்துள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நாடு முழுவதும் மேற்கொண்டுள்ளவேலைநிறுத்தப் போராட்டம் இன்று 5வது நாளாக நீடிக்கிறது.
தமிழகத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இவற்றில்பெரும்பாலான லாரிகள் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில்தான் உள்ளன.
இந்த லாரிகளை நம்பியே இந்த மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பிழைப்புநடத்தி வருகின்றனர். இந்நிலையில் லாரிகள் வேலைநிறுத்தம் தொடர்வதால்இத்தொழிலாளர்களுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது.
எனவே இந்த வேலைநிறுத்தத்தைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்த தொழிலாளர்கள்முடிவு செய்துள்ளனர்.
கடந்த 1992ல் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது சேலம் மாவட்டத்தில் ஒருபகுதியாகத்தான் நாமக்கல் இருந்தது. அப்போது சேலத்தில் லாரி உரிமையாளர்கள்பிரம்மாண்டமான பேரணி நடத்தினர்.
அந்தப் பேரணி பின்னர் பெரும் கலவரமாக வெடித்தது. இதையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடுநடத்தியதில் ராசிபுரத்தைச் சேர்ந்த ஒரு லாரி உரிமையாளர் பலியானார்.
இதைத் தொடர்ந்து லாரி உரிமையாளர்களும் தொழிலாளர்களும் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.அவ்வழியாகச் சென்ற பல பஸ்கள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. திறக்கப்பட்டிருந்தகடைகள் சூறையாடப்பட்டன. அப்போது சேலத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துவிட்டது.
இந்நிலையில் தற்போதும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் 1992ல்ஏற்பட்ட அதே போராட்டம் மீண்டும் நடக்கும் என்று உளவுத் துறை போலீசார் கருதுகின்றனர்.
அவ்வாறு போராட்டம் நடத்தப்பட்டால் அது பெரும் கலவரமாக வெடிக்க வாய்ப்புள்ளது என்றும்அவர்கள் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே காய்கறி மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்லும் பஸ்கள், மினி பஸ்கள், சிறு வாகனங்கள்,ஆட்டோக்கள் ஆகியவற்றை லாரி உரிமையாளர்கள் வழிமறித்து தடுத்து வருகின்றனர்.இதுபோன்ற சம்பவங்களாலும் கலவரம் வெடிக்கலாம் என்றும் உளவுத் துறை எச்சரித்துள்ளது.
தெருவில் இறங்கித் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது அது கலவரமாக வெடித்தால்அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை என்று சில லாரி உரிமையாளர்களே கூறியுள்ளதும்குறிப்பிடத்தக்கது.


