For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரிசி- பருப்பு விலை உயர்வு: ஒரு ஆப்பிள் விலை ரூ. 25

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

லாரிகள் வேலை நிறுத்தம் இன்று 6வது நாளை எட்டியுள்ளது. இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் ஏதும் வெற்றிபெறாததால் வேலை நிறுத்தம் தீவிரமடைந்தவண்ணம் உள்ளது. இதனால் இதுவரை அத்தியாவசிப் பொருள்களின்விலை உயர்ந்து வருவதோடு அவற்றுக்கு தட்டுப்பாடும் ஏற்பட ஆரம்பித்துள்ளது.

காய்கறிகள், அரிசி, பருப்பு போன்றவற்றின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ண் உள்ளது.

இந்த ஸ்டிரைக் காரணமாக தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது சென்னை நகரம் தான். இந்த நகரில்காய்கறியில் இருந்து அரிசி, பருப்பு வரை எந்த உற்பத்தியும் இல்லை. எல்லாமே வெளியில் இருந்து தான் வந்தாகவேண்டும். இதனால் அனைத்துப் பொருள்களும் கடுமையான விலையேற்றம் அடைந்துள்ளன.

அரிசி விலை ரூ. 3 வரை உயர்ந்துள்ளது. உயர் ரக பொன்னி அரிசி கிலோ ரூ. 18க்கு விற்று வந்தது. இப்போதுஇதன் விலை ரூ. 21 ஆகி விட்டது.

இட்லி அரிசி ரூ. 10லிருந்து 12 ஆகி விட்டது. துவரம் பருப்பு கிலோ ரூ. 34லிருந்து ரூ.40 ஆக உயர்ந்துள்ளது.

மிளகாய் வற்றல் ரூ. 35லிருந்து ரூ.39 ஆகி விட்டது. பூண்டு கிலோ ரூ.35லிருந்து ரூ.40ஆகிவிட்டது.

தமிழகத்தில் மட்டும் கடந்த 5 நாட்களில் சுமார் ரூ. 130 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகத்தெரிகிறது.

நாமக்கல்ல, சங்ககிரி, சேலம், கரூர், திருச்சி, ஈரோடு பகுதிகளில் மட்டும் சுமார் 2 லட்சம் லாரிகள்சாலையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. மதுரை, ராமநாதபுரம் பகுதியில் 20 ஆயிரம் லாரிகள்நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, தேங்காய் போன்ற அத்தியாவசிப் பொருள்கள் கூட ஓரிடத்தில்இருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செலப்பட்டாமல் குவிந்து கிடக்கின்றன. இதனால் வியாபாரிகளுக்குபெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தப் பொருள்களின் விலை உயர்ந்து வருவதால் மக்களுக்குபெரும் கஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ரேசன் கடைகளுக்குக் கூட அரிசி, பருப்பு வந்து சேரவில்லை. இதனால் மண்ணெண்ணெய் கூட கிடைக்காமல்ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கேஸ் சிலிண்டெர்களும கூட கிடைக்கவில்லை.

காய்கறிகள் அருகாமை கிராமங்களில் இருந்து வந்து சேர்ந்துவிடுவதால் நகர்ப் பகுதிகளில் காய்கறிகள்தட்டுப்பாடு அவ்வளவாக இல்லை. ஆனால், பழங்களின் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது. ஒரு ரூபாய் விற்றவாழைப்பழம் இரண்டு ரூபாயாகிவிட்டது.

தண்ணீர் லாரிகளும் ஸ்டிரைக்:

இந் நிலையில் குடிநீர் வினியோகிக்கும் லாரிகளும் கூட வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளதுமக்களை மிரட்டியுள்ளது.

இந்த ஸ்டிரைக்கில் தண்ணீர் லாரிகள் இதுவரை பங்கேற்கவில்லை. அவையும் போராடத் துவங்கினால் தமிழகத்தில்வறட்சியில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலை மிக பரிதாபமான நிலையை எட்டிவிடும்.

பால் வினியோகம் தப்பியது:

இதற்கிடையே ஆவின் பால் வினியோகமும் தடைபடலாம் என்று கூறப்பட்டது. ஆனால், அதை ஆவின்நிறுவனத்தினர் மறுத்துள்ளனர். ஆவின் நிறுவன பொது மேலாளர் ராஜேந்திரன் கூறுகையில்,

ஆவின் நிறுவனத்தின் 34 லாரிகள் மூலம் வாடைக்கு எடுக்கப்பட்ட 86 லாரிகள் மூலம் ஆவின் பால்வினியோகிக்கப்படுகிறது. வெளியிடங்களிலிருந்து பாலை எடுத்து வர ஆவின் நிறுவனத்தின் 25 லாரிகளும், 30வாடகை லாரிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

வாடகைக்கு எடுக்கப்பட்ட லாரிகள் அனைத்தும் குத்தகை அடிப்படையில் இயங்கி வருகின்றன. எனவே லாரிகள்இயக்கத்தில் பிரச்சினை ஏதும் இல்லை.

மேலும் லாரிகளை இயக்குவதற்கு ஒரு நாளைக்கு 4,500 லிட்டர் டீசல் தேவைப்படும். தற்போது 28,000 லிட்டர்டீசலை நாங்களே இருப்பு வைத்துள்ளோம். எனவே, அடுத்த ஐந்து நாட்களுக்கு வினியோகத்தில் பிரச்சினைஇருக்காது என்றார் அவர்.

லாரி உரிமையாளர்கள் மிரட்டல்:

இதற்கிடையே லாரிகளை ஓட்டுமாறு தங்கலை போலீஸார் கட்டாயப்படுத்துவதாகவும் மறுத்தால் பொய் வழக்குப்போடுவதாக மிரட்டுவதாகவும் தமிழக லாரி உமையாளர்கள் சங்கத் தலைவர் செங்கோடன் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் கூறுகையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள லாரி டிரைவர்களை அழைத்து போலீஸார் மிரட்டுகிறார்கள்.உடனடியாக காய்கறிகள் போன்றவற்றை ஏற்றிச் செல்லுமாறும் இல்லாவிட்டால் பொய் வழக்குப் போடுவோம்என்றும் மிரட்டுகிறார்கள். இதை அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

இந்த நிலை தொடர்ந்தால் பால், மருந்து, தண்ணீர் போன்ற அத்தியாவசியப் பொருள்களை வினியோகிக்கும்லாரிகளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்க விரும்புகிறோம் என்றார்.

கோழிகள் படும்பாடு:

பல்லடம், நாமக்கல் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மேலும் பல்லாயிரம் கறிக் கோழிகள் தீவனம் இல்லாமல் இறக்கும்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனலே சுமார் 2 லட்சம் கோழிகள் இறந்துள்ளன. கோழிகளுக்கு தீவனம் ரயில் மூலம்கொண்டு வரப்படுகிறது.

ஆனால், தீவன மூட்டைகள் அனைத்தும் திருப்பூர், சங்ககிகி ஆகிய ரயில் நிலையங்களில் குவிந்து கிடக்கின்றன.அவற்றை எடுத்து வருவதற்கு லாரிகள் இல்லாத காரணத்தால் தீவனம் கோழிப் பண்ணைகளுக்குப் போய்ச்சேராமல் பசியால் வாடும் நிலைக்கு கோழிகள் தள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஒரு ஆப்பிள் விலை ரூ.25க்கு விற்கப்படுகிறது.

நாயுடு தலையிடுவாரா?

இதற்கிடையே லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுதலையிட வேண்டும் என்று பல்வேறு மாநில லாரி உரிமையாளர்கள் சங்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

இப்போது காஷ்மீரில் உள்ள பிரதமர் வாஜ்பாய் திங்கள்கிழமை டெல்லி திரும்புகிறார். அப்போது நாயுடு டெல்விசென்று இந்தப் பிரச்சனை குறித்து விவாதிப்பார் என்று கூறப்படுகிறது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X