புது மாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை: காப்பாற்ற போன மனைவியும் சாவு
சென்னை:
திருமணமாகி 7 மாதமே ஆன நிலையில் கணவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். அவரைக் காப்பாற்றமுயன்ற மனைவியும் தீயில் கருகி இறந்தார்.
சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். தினக் கூலியாக வேலை பார்த்து வந்தார். வயது 23 தான்ஆகிறது. இவருக்கும் மனோ என்ற பெண்ணுக்கும் 7 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
ஸ்ரீதருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால், கல்யாணமான சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந் நிலையில் ஸ்ரீதர் நேற்று வீட்டைப் பூட்டிக் கொண்டு உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.இதைப் பார்த்து மனைவி மனோ கதவை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடி வந்தார்.
அவரைக் காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால் அவரது உடலிலும் தீ பரவியது. இதில் இருவருமே தீயில் கருகினர்.ஸ்ரீதர் வீட்டிலேயே பிணமானார். உடலெல்லாம் கருதிய நிலையில் மனோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.ஆனால், அங்கு சிகிச்சை பலனிறி அவர் இறந்தார்.
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


