For Daily Alerts
Just In
""ஜெயலலிதாவுக்கு தேச பக்தி அதிகம்"": சு. சுவாமி
சென்னை:
பொடா சட்டத்தை சிறப்பாகப் பயன்படுத்துவதன் மூலம் முதல்வர் ஜெயலலிதா தேசபக்தியுடன்நடந்து கொள்கிறார் என ஜனதா கட்சித் தலைவரான சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசி வருபவர்களைபொடா சட்டத்தின் கீழ் ஜெயலலிதா தொடர்ந்து கைது செய்து வருகிறார்.
தேச பக்தி உணர்வு அதிகம் இருப்பதாலேயே ஜெயலலிதா இவ்வாறு நடந்து கொள்கிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு திமுக உடனடியாக வெளியேற வேண்டும் என்றார் சுவாமி.


