ஆரம்பித்தார் ஜெயலலிதா.. பதிலடி தந்தார் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.
சென்னை:
சமீபகாலமாக மார்க்சிஸ்ட் கட்சியையும், கம்யூனிஸத்தையும் கடுமையாக விமர்சித்து வரும்முதல்வர் ஜெயலலிதா இன்று மீண்டும் அந்தக் கட்சி மீது தாக்குதல் தொடர்ந்தார். இதையடுத்துஅவருக்கும் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்தியாவில் கொஞ்சமாவது நேர்மையுடன் நடந்து கொள்ளும் கட்சி மார்சிஸ்ட் கட்சி. அதன்எம்.பிக்களும் எம்.எல்.ஏக்களும் பொது வாழ்வில் நேர்மைக்கும், நியாயத்துக்கும் பேர்போனவர்கள். அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதும் வந்தது இல்லை.
காண்ட்ராக்டர்களுடன் கூட்டு சேர்ந்து கொள்ளை அடிப்பது, மணல் கொள்ளையர்களுடன் கூட்டுசேர்வது, சாராய வியாபாரிகளுக்கு உதவுவது, கரை வேட்டி கட்டிக் கொண்டு ஊர் சொத்தைகொள்ளையடிப்பது போன்ற செயல்களை அவர்கள் செய்வது இல்லை.
இந் நிலையில் தான் இந்தக் கட்சியை குறை கூற ஆரம்பித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு நிதி ஒதுக்குவது தொடர்பான விவாதம் இன்று சட்டசபையில்நடந்தது. அப்போது குறுக்கிட்டுப் பேசிய ஜெயலலிதா,
மேற்கு வங்காளத்தில் புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையிலான மார்க்சிஸ்ட் அரசு வரும் 11ம் தேதிஅம் மாநிலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல்களில் எதிர்க் கட்சியினரை மனு தாக்கல்செய்யவிடாமல் தடுத்து வருகிறது.
இதனால் சுமார் 10,000 வார்டுகளில் போட்டியே இல்லாமல் வேட்பாளர்கள்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது இந்தியாவிலேயே இதுவரை நடந்திராதது. ஜனநாயகத் தேர்தல்முறைக்கும் எதிரானது என்றார் ஜெயலலிதா.
இதற்கு மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்மம்தா பானர்ஜி சொல்லிய பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டு அதை ஜெயலலிதாசட்டமன்றத்தில் பேசுவது தவறு என்று அவர்கள் கண்டித்தனர்.
ஆனால் ஜெயலலிதா அதை மறுத்தார். "பானர்ஜி கூறியதெல்லாம் எனக்குத் தெரியாது. ஒருமுன்னணி செய்தித்தாளில் வெளியான செய்தியைப் படித்துப் பார்த்து விட்டுதான் சொல்கிறேன்"என்றார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய மற்றொரு மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏவான பாலபாரதி,பத்திரிக்கைகளில் வரும் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு ஒரு முதல்வர் இவ்வாறுகுற்றச்சாட்டுக்களை சுமத்துவது வேடிக்கையாக உள்ளது.
இதே பத்திரிக்கைகள் தான் அதிமுக அரசின் ஊழல்களையும் தவறுகளையும் வெளிப்படுத்திவருகின்றனவே. அது ஏன் ஜெயலலிதாவின் கண்களில் படவில்லை?? என்று கேட்டார். (அப்போதுஅதிமுக எம்.எல்.ஏக்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து பாலபாரதியைப் பார்த்துத் திட்டினர்.பாலபாரதியின் கேள்வி ஜெயலலிதாவையும் நெளியச் செய்தது).
தொடர்ந்து பேசிய பாலபாரதி, முதலில் பாப்பாபட்டி மற்றும் கீரிப்பட்டி ஆகிய தலித் பஞ்சாயத்துத்தொகுதிகளுக்கு ஜெயலலிதா தேர்தலை நடத்திக் காட்டட்டும். அதற்குப் பிறகு பேசலாம். சில ஆதிக்கஜாதியினரின் அடாவடி காரணமாக இந்த தாழ்த்தப்பட்டவர்களின் தொகுதிகளில் பல ஆண்டுகளாகதேர்தலே நடத்த முடியாத நிலை உள்ளது.
இதே நிலை நீடித்தால் அரசியல் சட்டம் 356வது பிரிவை தமிழகத்தில் பயன்படுத்துவதுதான் சரியாகஇருக்கும் என்று காட்டமாக பதிலளித்தார் பாலபாரதி.
அவரது பேச்சு அதிமுகவினர் இடையே பெரும் எரிச்சலை மூட்டினாலும் அவர் எடுத்து வைத்தபாயிண்டுகள் ஆணித்தரமாக இருந்ததால் முதல்வர் ஜெயலலிதாவால் அவருக்கு சரியான பதிலடி தரமுடியவில்லை.
"தமிழக உள்ளாட்சித் தேர்தலை மேற்கு வங்காள உள்ளாட்சித் தேர்தலுடன் ஒப்பிட்டுப் பேசுவதுதான்வேடிக்கையாக உள்ளது. அப்படியே பார்த்தாலும் மேற்கு வங்காளத்தில் எதிர்க் கட்சியினரை வேட்புமனுவே தாக்கல் செய்ய விடாமல் ஆளும் மார்க்சிஸ்ட் அரசு தடுத்து வருகிறது. ஆனால் தமிழகத்தில்அப்படி நிலைமை எதுவும் இல்லையே என்று ஒப்புக்கு பதில் சொல்லிவிட்டு உட்கார்ந்தார்ஜெயலலிதா.
இடையில் குறுக்கிட்ட பாஜக உறுப்பினர் எச். ராஜா, "தமிழகத்தில் 356வது அரசியல் சட்டப்பிரிவைப் பயன்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் கூறுவது சரியல்ல.தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எதுவும் கெடவில்லை என்பதை பாஜக தலைவர் வெங்கையாநாயுடுவே கூறியுள்ளார். அதனால் தமிழக அரசைக் கலைக்க வேண்டிய அவசியம் எதுவும்எழவில்லை" என்று இடையில் புகுந்து ஜெயலலிதாவுக்கு ஜால்ரா தட்டிவிட்டு உட்கார்ந்தார்.


