ஜாமீனில் விடுதலையானார் ஸ்டாலின்: மதுரை சென்றார்
சென்னை & கடலூர்:
போலீசாரைக் கொலை செய்ய முயற்சித்ததாகப் போடப்பட்டுள்ள வழக்கில் திமுக இளைஞரணிச்செயலாளர் ஸ்டாலினுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கடலூர்சிறையிலிருந்து விடுதலை செயப்பட்டார்.
ஆனால், வரும் 26ம் தேதி வரை அவர் மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் காவல் நிலையத்தில்தினமும் காலை 10 மணிக்குக் கையெழுத்துப் போட வேண்டும் என்று நிபந்தனைவிதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கடலூர் சிறையில் இருந்து இன்று காலை நேராகமதுரைக்குப் புறப்பட்டார்.
ராணிமேரிக் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்தது, மாணவிகளைப் போராடத் தூண்டியது போன்றவழக்குகளில் ஸ்டாலினுக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிவிட்டது.
ஆனால், தன்னைக் கைது செய்ய வந்த போலீசாரை திமுகவினரை வைத்து கொலை செய்யமுயன்றதாக வேளச்சேரி போலீசார் ஸ்டாலின் மீது இன்னொரு வழக்குப் போட்டனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஒரு மனுவை ஸ்டாலின்தாக்கல் செய்திருந்தார். தன்னைக் காவலில் வைக்க உத்தரவிட்ட சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும்ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
இதில் சைதாப்பேட்டை நீதிமன்றம் அவரது மனுவை நேற்று நிராகரித்துவிட்டது. இந்நிலையில்முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் போடப்பட்ட ஜாமீன் மனுவும் நேற்று விசாரணைக்கு வந்தது.
இம்மனுவை விசாரித்து முதன்மை அமர்வு நீதிபதி ஜெயக்குமார் ஸ்டாலின் உள்பட 10 பேருக்குஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். நீதிபதி தன் உத்தரவில்,
இவ்வழக்கில் எந்தப் போலீசாரும் காயம் அடைந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. மேலும் தன்வீட்டிற்குள் போலீசாரை அனுமதிக்கக் கூடாது என்று திமுகவினரிடம் ஸ்டாலின் கூறியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வேறு எந்தக் கடுமையான குற்றச்சாட்டுக்களும் இல்லை. ஸ்டாலின் உள்ளிட்ட மனுதாரர்கள் 11 நாள்வரை சிறையில் இருந்துள்ளனர். ஏற்கனவே ஒரு வழக்கில் ஸ்டாலினுக்கு ஜாமீன்வழங்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டின் தன்மை, மனுதாரர்கள் சிறையில் இருந்த நாட்கள் ஆகியவற்றைப் பார்க்கும்போதுஜாமீன் வழங்குவதற்குத் தகுதியானதாகவே இவ்வழக்கை நான் கருதுகிறேன்.
ரூ.10,000க்கு சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கு இரு நபர் ஜாமீனிலும் மனுதாரர்களைசைதாப்பேட்டை நீதிமன்றம் விடுவிக்கலாம் என்று பரிந்துரைக்கிறேன். மேலும் வரும் 26ம் தேதிவரை மனுதாரர்கள் மதுரையில் தங்கியிருந்து, தினமும் காலை 10 மணிக்கு தல்லாகுளம் காவல்நிலையத்தில் கையெழுத்துப் போட வேண்டும்.
அதற்கு மறுநாளிலிருந்து மே 20ம் தேதி வரை சென்னை-வேளச்சேரி காவல் நிலையத்தில் தினமும்காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்துப் போட வேண்டும்.
தவிர, வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் நடக்கும் தர்ணா போராட்டங்களின்போது மனுதாரர்கள்எந்தப் பிரச்சனையையும் தூண்டக் கூடாது என்று நீதிபதி தன் தீர்ப்பில் உத்தரவிட்டார்.
இதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றம் ஸ்டாலினை ஜாமீனில் விடுதலை செய்தது. இதைத்தொடர்ந்து இன்று காலை கடலூர் சிறையில் இருந்து ஸ்டாலின் வெளியே வந்தார். அவரைஆயிரக்கணக்கான திமுகவினர் வரவேற்றனர்.
பின்னர் தனது வழக்கறிஞறிகளுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்திய ஸ்டாலின் காரில் மதுரைபுறப்பட்டார்.


