For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மணல் கொள்ளையை தடுத்த அதிகாரியை லாரி ஏற்றி கொன்றவன் கைது

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அருகே ஆற்றில் இருந்து திருட்டுத்தனமாக மணல் கடத்தியதைத் தடுத்த வருவாய் ஆய்வாளரை லாரி ஏற்றிக் கொன்றடிரைவரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். அந்த லாரியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் பழைய சீவரம் என்ற இடத்தில் பாலாற்றிலிருந்து மணல் கடத்திய லாரிகளை வருவாய்த்துறை ஆய்வாளர் சண்முகசுந்தரம்தடுத்தார். அப்போது ஒரு டிரைவர் லாரியை அவர் மீது ஏற்றிக் கொன்றான்.

பின்னர் அங்கிருந்து லாரியுடன தப்பிச் சென்றுவிட்டான்.

பெரும் பரபரப்பு ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் லாரி டிரைவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மணல் லாரி டிரைவர்கள்பலரைப் பிடித்து போலீஸார் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.

அப்போது சண்முகசுந்தரத்தை லாரி ஏற்றிக் கொன்றது குமார் என்ற டிரைவர் என்று தெரியவந்தது. அவன் திம்மாவரம் என்ற பகுதியைச்சேர்ந்தவன் என்றும் தெரிந்தது.

இதைத்தொடர்ந்து போலீஸார் திம்மாவரம் விரைந்தனர். அங்கு பதுங்கியிருந்த குமாரை கைது செய்தனர். மதுராந்தகம் அருகே மெக்கானிக்ஷெட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியையும் பறிமுதல் செய்தனர்.

சட்டசபையில் எதிரொலி:

இதற்கிடையே இன்று சட்டசபையிலும் இந்த கொலை விவகாரம் எதரொலித்தது. தமிழ்நாடு முழுவதும் மணல் கொள்ளை தொடர்ந்துநடந்து கொண்டிருப்பதாக எதிர்க் கட்சியினர் குற்றம் சாட்டினர். எதிர்க் கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தையும் கொண்டு வந்தனர்.

இந்தத் தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், மணல் கொள்ளையைத் தடுத்த அதிகாரிகொல்லப்பட்டதன் பின்னணியில் மாபியா கும்பல் உள்ளது. எனவே, அது தொடர்பாக நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.உயிரிழந்த அதிகாரியின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்றார்.

இதற்குப் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, தமிழ் நாட்டில் ஒரு பக்கம் மணல் கொள்ளை நடந்து கொண்டிருப்பதும் மறுபக்கம் அதைத்தடுக்க அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருவதும் உண்மை.

மணல் கொள்ளையர்களைத் தடுக்க முயன்று உயிர் நீத்த அரசு அதிகாரி சண்முகசுந்தரத்தின் கடமை உணர்வையும் துணிச்சலையும் நாம்பாராட்டியே ஆக வேண்டும். பொதுச் சொத்தைக் காக்க முயன்று உயர் நீத்த அவரது குடும்பத்தினருக்கு அரசு ரூ. 5 லட்சத்தை உடனடியாகவழங்கும்.

அவரை லாரி ஏற்றிக் கொண்ட டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். லாரியும் மேலும் 6 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும்8 பேரைப் பிடிக்கவும் தீவிர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X