For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராணி மேரி கல்லூரியை இடிக்க மத்திய அரசு தடை: டி.ஆர்.பாலு வைத்த ஆப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பொது இடங்களில் கட்டப்பட்டுள்ள வரலாற்றுச் சின்னங்களையோ, கட்டடங்களையோ இடிக்கக் கூடாது கூடாதுஎன்று மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சகம் திடீர் தடை விதித்துள்ளது.

இதன்மூலம் சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள பழம்பெரும் ராணி மேரி பெண்கள் கல்லூரியை இடிக்கும்முதல்வர் ஜெயலலிதாவின் திட்டத்துக்கு ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சராக உள்ள திமுகவின் டி.ஆர்.பாலுவின் முயற்சியால் இந்த புதிய தடைகொண்டு வரப்பட்டுள்ளது.

இது தவிர ராணி மேரிக் கல்லூரியை இடிப்பதை எதிர்த்து தமிழக அரசுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில்நடந்து வரும் வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ளுமாறு மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

ராணி மேரிக் கல்லூரியை இடித்துவிட்டு அந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முதல்வர் ஜெயலலிதாமுடிவு செய்துள்ளார். ஜோதிடரின் ஆலோசனைப்படி அவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகக்கூறப்படுகிறது.

தங்கள் கல்லூரியை இடிப்பதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த ராணி மேரி கல்லூரி மாணவிகள் பெரும்போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு அக்கல்லூரியின் முன்னாள் மாணவிகளும், சில அரசியல்கட்சிகளும், வேறு பல அமைப்பினரும் தங்கள் ஆதரவைத் தெரிவித்தன.

திமுக இளைஞரணிச் செயலாளர் ஸ்டாலினும் அக்கல்லூரிக்குச் சென்று தங்கள் கட்சியின் ஆதரவைமாணவிகளிடம் நேரடியாகத் தெரிவித்தார். ஆனால் ஸ்டாலின் உள்ளிட்ட சில திமுக எம்.எல்.ஏக்கள் அத்துமீறிகல்லூரிக்குள் நுழைந்ததாகக் கூறி தமிழக அரசு அவர்களைக் கைது செய்தது.

இதற்கிடையே ராணி மேரி கல்லூரியை இடிப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததைத்தொடர்ந்து மாணவிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு வகுப்புகளுக்குத் திரும்பினர். தற்போது செமஸ்டர்தேர்வுகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

மத்திய அரசு தடை:

இந்நிலையில் பொது இடங்களில் கட்டப்பட்டுள்ள வரலாற்றுச் சின்னங்களையோ கட்டடங்களையோ இடிக்கக்கூடாது என்று மத்திய சுற்றுச்சூழல் துறை தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு நேற்றிரவு வெளியிடப்பட்டது.

அந்த உத்தரவின் விவரம்:

நாட்டின் கடற்கரைச் சாலைகளில் உள்ள எந்த வரலாற்றுச் சிறப்பு வாயந்த கட்டடங்கள், கலாச்சார- பாரம்பரியகட்டங்கள், பழமை வாய்ந்த கட்டங்கள், கல்விப் பணிக்காக பயன்படுத்தப்படும் கட்டடங்கள் ஆகியவற்றை இடிக்கஉடனடியாகத் தடை விதிக்கப்படுகிறது.

அப்படியே கட்டடத்தை இடிக்க வேண்டும் என்றாலோ, கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என்றாலே அதற்குமத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சகத்தின் முன் அனுமதியைப் பெற வேண்டும்.

ரூ.5 கோடிக்கும் அதிகமான செலவில் புதிய கட்டடம் கட்டுவதாக இருந்தால சுற்றுச் சூழல் அமைச்சகத்தின்அனுமதியைப் பெற வேண்டும்.

சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டத்தின் 5வது விதிப்படி தொன்மைவாய்ந்த கட்டடங்களையோ, பொது உபயோகத்தில்உள்ள கோவில்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றையோ இடிக்கவோ கூடாது. இந்தவிதியின் கீழ் தான் இந்தத் தடை உத்தரவு வெளியிடப்படுகிறது.

நிலத்தடி நீர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சுற்றுச் சூழல் பாதுகாப்பு காணங்களுக்காக இந்த நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வழக்கில் சேர அனுமதி கோரிக்கை:

இதற்கிடையே ராணி மேரிக் கல்லூரி இடிப்பை எதிர்த்து தமிழக அரசுக்கு எதிராக சென்னை நீதிமன்றத்தில் போடப்பட்டுள்ள வழக்கில் தன்னையும்சேர்த்துக் கொள்ளக் கோரி மத்திய அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது. மேலும் கடற்கரைச் சாலைகளில் உள்ள பழம்பெரும் கட்டடங்களை இடிக்கவிதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவையும் நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது.

திமுகவின் முயற்சியால் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.

வழக்கில் சேர்த்துக் கொள்ளக் கோரும் மனுவையும், கட்டடங்களை இடிக்க விதிக்கப்பட்ட புதிய தடை உத்தரவையும் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர்ஜெனரல் கோபாலன் இன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையிலானமுதலாவது டிவிஷன் பெஞ்சிடம் இந்த மனு தாக்கலானது.

அப்போது தமிழக அரசின் வழக்கறிஞர் என்.ஆர். சந்திரன், மத்திய அரசின் இந்த மனுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த மனுவை ஏற்பதா இல்லையா என்பது குறித்த விசாரணையை வரும் 28ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X