லாரி உரிமையாளர்களிடையே பிளவு: பிசுபிசுக்கும் ஸ்டிரைக்
டெல்லி:
லாரி உரிமையாளர்களில் ஒரு பிரிவினர் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டதைத்தொடர்ந்து லாரிகள் ஸ்டிரைக் பிசுபிசுக்கத் தொடங்கியுள்ளது.
15 ஆண்டுகள் பழமையான லாரிகள் மீதான தடையை நீக்க வேண்டும், மதிப்புக் கூட்டு வரியிலிருந்து விலக்குஅளிக்க வேண்டும், ஆர்.சி. புக் மற்றும் லைசென்ஸ் ஆகியவற்றை கம்ப்யூட்டர்மயமாக்க வேண்டும் என்பனஉள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இதனால் நாடு முழுவதும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்வது கடுமையாகப்பாதிக்கப்பட்டது. கடந்த 20ம் தேதி முதல் டேங்கர் லாரிகளும் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளன.
இந்நிலையில் லாரி உரிமையாளர்களின் 7 கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு மற்ற 3கோரிக்கைகளையும் நிராகரித்து விட்டது. மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கந்தூரி இதுதொடர்பான ஒரு அறிக்கையை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அவ்வறிக்கையில்,
சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்க வரியை விலக்கிக் கொள்ளுதல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அதேபோல்டீசலுக்கு நிலையான விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்க முடியாது.
மேலும் அதிக சுமைகளை ஏற்றத் தடை விதிப்பது மாநில அரசுகள் முடிவு செய்ய வேண்டிய விஷயம். எனவேஇந்தக் கோரிக்கையையும் ஏற்க முடியாது. மற்ற 7 கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ள மத்திய அரசு தயாராகஉள்ளது என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் கந்தூரி.
லாரி உரிமையாளர்களின் 3 கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து போராட்டம் தீவிரமடையும் எனஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லாரிகள் ஸ்டிரைக் இன்று 10வது நாளை எட்டியுள்ள நிலையில் போராட்டம்நடத்துபவர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது.
அகில இந்திய மோட்டார் வாகன சங்கங்களின் பேரவையில் பல சங்கங்கள் உள்ளன. அவற்றில் சரக்கு வாகனஉரிமையாளர்கள் சங்கத்தினர் மட்டும் இன்று தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
அவர்கள் தனியாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து மற்ற லாரி உரிமையாளர்களும் படிப்படியாக வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அவர்கள் இன்னும் வேலைநிறுத்தப் போராட்டம்தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்று கூறியுள்ளனர்.
ஏற்கனவே ஆந்திரா, ஒரிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 3 மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் தங்கள்போராட்டத்தை முழுமையாக வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுதொழில் நிறுவனங்கள் பாதிப்பு:
இதற்கிடையே லாரிகள் ஸ்டிரைக் காரணமாக தமிழகத்தில் சிறுதொழில் நிறுவனங்கள் கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளன.
பல சிறுதொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மூலப் பொருட்கள் கிடைக்காததால் உற்பத்திபாதிக்கப்பட்டுள்ளது. மேலும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களும் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படமுடியாமல் அந்த நிறுவனங்களிலேயே தேங்கியுள்ளன.
இதனால் மிகவும் மோசமான அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சிறுதொழில் நிறுவன அதிபர்கள் கூறியுள்ளனர்.


